முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
136

எண

எண்ணுமாறு அறியமாட்டேன் - 1அவனும் விபூதி விஷயமாகப் பரக்கச் சொல்லிக்கொண்டு போந்து 2‘அருச்சுனா! முக்கியமானவற்றைச் சொல்லுகிறேன்; ஏனென்றால், என் விபூதியின் விரிவிற்கு முடிவு இல்லை,’ என்றானன்றே? அப்படியே, இவரும் மேலே சிலவற்றைச் சொல்லி, ‘இவனைச் சொல்லும் வகையினை அறிகின்றிலேன்,’ என்கிறார். ‘ஆனாலும், சுருங்கச் சொன்னாலோ?’ என்னில், யாவையும் எவரும் தானே - அறிவுடைப்பொருள் அறிவில்பொருள் முற்றும் சரீரமாகத் தான் ஆத்துமாவாக இருக்குமித்தனை.

(9)

265

யாவையும் எவரும் தானாய்
    அவர்அவர் சமயந் தோறும்
தோய்வுஇலன்; புலன்ஐந் துக்கும்
    சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவிசேர் உயிரின் உள்ளால்
    ஆதும்ஓர் பற்றுஇ லாத
பாவனை அதனைக் கூடில்,
    அவனையும் கூட லாமே.

    பொ-ரை : ‘அறிவில்பொருள்களும் அறிவுடைப்பொருள்களும் தானேயாய், அவர் அவர்களுடைய அவஸ்தைகளில் பற்று இல்லாதவனாய், ஐம்பெரும்புலன்களாலும் அறியப்படாதவனாய், ஞான உருவினனாய் இருப்பான் இறைவன்; உடலோடு கூடியிருக்கிற உயிரினுடைய சொரூபத்தில், சரீரத்தினுடைய தோன்றுதல் வளர்தல் குறைதல் முதலிய தன்மை வேறுபாடு ஒன்றிலும் பற்றில்லாத பாவனையானது ஆத்துமாவின் பக்கல் கூடுமாகில், சரீரத்தினுடைய வளர்தல் குறைதல் முதலிய தன்மைகளும், ஆத்துமாவினுடைய இன்ப துன்பங்களும் சாரமாட்டா என்னுமிதுவும், அவ்விறைவனையும் கூடலாம்,’ என்றவாறு.

    வி-கு : ‘அவர் அவர் சமயந்தோறும்’ என்ற இடத்து ‘அவையவை சமயந்தோறும்’ என்பதனையும் சேர்த்துக்கொள்க. சமயம்-அவஸ்தை; விகாரம். ஆவி-உடல்; ஆகுபெயர். ஆதும்-யாதும் என்றதன் மரூஉ. ‘உடம்பினுள் இருக்கின்ற உயிர் அவ்வுடலின்

_____________________________________________________

1. ‘’அறியமாட்டேன்’ என்கிறது என்? முடியச் சொல்லப் போகாதோ?’ என்ன,
  ‘அவனும் விபூதி விஷயமாக’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.

2. ஸ்ரீ கீதை, 10 : 19.