முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
14

நிரதிசய போக்கிய ஜாதத்திலே 1பிரவணன் ஆனாய்; உன்னை விட்டால், பின்னை 2’நினைவு தவறுவதால் புத்தி நாசமடைகிறது; புத்தி நாசத்தினால் நாசமடைகின்றான்,’ என்கிறபடியே ‘புத்தி நாசமடைவதற்குரிய பொருள்களில் இவர்கள் பிரவணர்களாய் இங்ஙனம் நோவுபட்டே போமித்தனையாகாதே!’ என்கிறார் என்றபடி.

(4)

227

வருந்தாத அருந்தவத்த
    மலர்கதிரின் சுடர்உடம்பாய்
வருந்தாத ஞானமாய்
    வரம்புஇன்றி முழுதுஇயன்றாய்;
வருங்காலம் நிகழ்காலம்
    கழிகால மாய்உலகை
ஒருங்காக அளிப்பாய்சீர்
    எங்குஉலக்க ஓதுவனே?

    பொ-ரை : வருந்தாமலே வந்த ( இயற்கையாகவுள்ள ) மிக மலர்ந்த பேரொளியுருவனாய் இயல்பிலேயமைந்த ஞானவுருவனாய் எல்லை இல்லாதபடி எல்லாப்பொருள்களிலும் நிறைந்திருக்கின்றாய்; மூன்று காலங்களுக்கும் உரியவனாகி, உலகங்களையெல்லாம் ஒரு படிப்படப் பாதுகாக்கின்றாய்; இத்தகைய உன்னுடைய நற்குணங்களை முடிவு பெறும்படி எங்ஙனம் கூறுவேன்?

    வி-கு : தவத்த - உரிச்சொல் ஈறு திரிந்தது; ‘தவ’ என்பது சொல். ‘உடம்பாய் முழுதியன்றாய்,’ என்க. ‘ஓதுவன் என்பதில் ‘அன்’ விகுதி தன்மைக்கண் வந்தது.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. மூன்றாம் பாட்டுக்கும் இப்பாட்டுக்கும் நேரே சங்கதி. நான்காம் பாட்டில் நாட்டாருடைய இழவு நடுவே 3பிரசங்காத் பிரஸ்துதமித்தனை. ‘கோவிந்தா’ பண்புரைக்க மாட்டேனே,’ என்று சொல்லுவான் என்? நாட்டாருடைய பேரிழவு நிற்க; மயர்வற மதிநலம் அருளப்பெறுகையாலே நீர் வேறுபட்டவரே; உலகத்தாரில் வேறுபட்ட அளவேயோ! விண்ணுளாரிலும் வேறுபட்டவரே; ஆதலால், நீர் நம்மைப் பேசமாட்டீரோ?’ என்ன, ‘என்னை எல்லாரிலும் வேறு

____________________________________________________

1. பிரவணன் - ஈடுபாடுடையவன்.

2. ஸ்ரீ கீதை, 2 : 69.

3. நடுவே பிரசங்காத் பிரஸ்துதம் - வேறு ஒரு காரணமாக வருகின்ற
  இடைப்பிற வரல்.