|
பட
பட்டவனாக்கினாயித்தனை
அல்லது உன்னை ஓர் எல்லைக்குட்பட்டவனாக்கினாய் இல்லையே!’ என்கிறார்.1
வருந்தாத வருந்
தவத்த மலர்கதிரின் சுடர் உடம்பாய் - ‘இவ்வடிவழகினை என்னால்தான் பேசலாயிருந்ததோ?’ என்கிறார்.
சுவாபாவிகமாய் வருவதாய், மிகவும் மலர்ந்த கிரணங்களையுடைய தேஜோ ரூபமாய். தவ - மிகுதி. இனி,
வருந்தாத அருந்தவத்த என்பதற்கு, ‘திருமேனியைக் கண்டவாறே அரிய தவத்தின் பலமோ?’ என்று தோன்றும்;
சிறிது மூழ்கிக் கண்டவாறே, ‘ஒரு தவத்தின் பலமன்று; ஸஹஜமான பாக்கியத்தின் பலம்,’ என்று தோன்றும்
என்று பொருள் கூறலுமாம். முன்னைய பொருளில், ‘வரும் தவத்த’ என்றும், இப்பொருளில், ‘அருந்தவத்த’
என்றும் பதங்களைப் பிரித்துக்கொள்க. மலர்ந்த கிரணங்களையுடைய ஒளியுருவமாய், அதுதன்னில் மண்
பற்றைக் கழித்து, இராசத தாமதங்கள் கலத்தலின்றிச் சுத்த சத்துவமயமாய், நிரவதிகப் பேரொளி
யுருவாய், ஆத்தும குணங்களுக்கும் பிரகாசகமான திவ்விய விக்கிரகத்தையுடையவனாதலின், ‘மலர் கதிரின்
சுடர் உடம்பாய்’ என்கிறார். ‘ஆயின், குணங்கள் பிரகாசிப்பதற்குக் காரணம் என்னை?’ எனின்,
கர்மங்கள் காரணமாக வருகின்ற சரீரங்கள் போலன்றே, இச்சையினாலே மேற்கொள்ளப்படுகின்ற
சரீரம் இருப்பது? என்றது, 2நம்மைப் போன்றவர்களுடைய சரீரங்கள் பாபத்தாலேயாயிருப்பன
சிலவும், புண்ணியத்தாலேயாய் இருப்பன
____________________________________________________
1. மூன்றாம்
பாசுரத்தைக்காட்டிலும் இப்பாசுரத்தில் சொல்லப்பட்ட
விசேடப்பொருள், ‘விண்ணுளாரிலும் வேறுபட்டவரே’
என்பது, முதல் பத்து,
ஈட்டின் தமிழாக்கம், அவதாரிகை, ‘திருமகள் கேள்வன் ஒன்று’ பக். 16.
காண்க. ‘வரம்பின்றி முழுதியன்றாய்’ என்றதனைக் கடாக்ஷித்து ‘உன்னை ஓர்
எல்லைக்குட்பட்டவனாயில்லையே!’
என்கிறார்.
2. ஸ்ரீ விஷ்ணு புரா.
5. 1 : 50. இந்தச் சுலோகம் கீழே தரப்படுகின்றது:
‘நாகாரணாத் காரணாத்வா
காரணா காரணாந்நச
ஸரீர க்ரஹணம்
வ்யாபிந் தர்மத்ராணாய கேவலம்.’
இச்சுலோகத்தில் ‘அகாரணம்’
என்றது, காரியத்தை; ‘காரணம் என்றது,
மூலப்பிரகிருதியை; ‘காரணாகாரணம்’ என்றது, மகத்து முதலான
தத்துவங்களை. இதனால், ‘நீ சரீரத்தை மேற்கொள்ளுவது
இவைகளினாலேயன்று; தர்மத்திற்காகவே,’
என்பதனைக் குறித்தவாறு. ‘சுவை
ஒளி ஊறு ஓசை’ என்ற திருக்குறளின் விசேடவுரையில் பரிமேலழகர்
எழுதியுள்ளவை இச்சுலோகத்தின் பொருளை விரித்துரைப்பதாக
அமைந்திருத்தல் காண்க.
|