முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
154

செ

சொல்லி பிரீதியினால் தூண்டப்பட்டவராய்ப் பாடி, பின்னை உடம்பு இருந்தவிடத்தில் இராமல் எழுந்தும், தரையில் கால் பாவாதே பறந்தும், இப்படிக் களிப்போடு கூடி நடனம் செய்யாதார். தம்மால் கருமம் என் - ‘இவன் தன் படைப்பால் கொண்ட பிரயோஜனம் என்? 1தன்னுடைய பிறப்பால் பிரயோஜனம் கொள்வான் தானே அன்றோ? ஆதலால், தான் சரீரத்தை எடுத்த இதனால் என்ன பிரயோஜனம் கொண்டானானான்?’ என்கிறார். தண் கடல் வட்டத்து உள்ளீர் சொல்லீர் - எங்களைப் போன்று வேறுபட்டவராயிருத்தலின்றியே இருந்தீர்களேயாயினும், சரீரத்தை எடுத்துப் பகவானை பஜனை செய்யாதே. இதர விஷயங்களிலே ஈடுபட்டவர்களாயுள்ளவர்களோடு ஒரே சாதியராய்ச் செல்லுகிற நீங்கள்தாம் சொல்லிக்காணீர். ‘ஆயின், விசேஷஜ்ஞர்களைக் கேளாமல், ‘தண்கடல் வட்டத்து உள்ளீர்’ என்று பொதுவிலே கேட்பது என்?’ எனின், கடலுக்குட்பட்ட பூமியிலுள்ளார் அடைய விசேஷஜ்ஞர்களாய் இரார்களே? ‘ஆயின், இதர விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களாய்ச் செல்லுகின்றவர்களைக் கேட்பின் தெரியுமோ?’ எனின், விசேஷஜ்ஞர்களோடு அல்லாதாரோடு இவ்வர்த்தம் பிரசித்தம் என்று இருக்கிறார்.

(1)

268

தண்கடல் வட்டத்துஉள் ளாரைத்
    தமக்குஇரை யாத்தடிந்து உண்ணும்
திண்கழற் கால்அசு ரர்க்குத்
    தீங்குஇழைக் கும்திரு மாலைப்
பண்கள் தலைக்கொள்ளப் பாடிப்
    பறந்தும் குனித்தும்உழ லாதார்
மண்கொள் உலகிற் பிறப்பார்
    வல்வினை மோத மலைந்தே.


    பொ-ரை :
‘குளிர்ந்த கடல் சூழ்ந்த பூமியில் உள்ளவர்களைக் கொன்று தங்களுக்கு உணவாக உண்ணுகின்ற வலிய வீரக்கழலைக் கட்டிய கால்களையுடைய அசுரர்களுக்குத் தீங்கினைச் செய்

___________________________________________________

1. ‘நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
  நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
  மேன்மே லுயர்த்தி நிறுப்பானும் தன்னைத்
  தலையாகச் செய்வானும் தான்.’

(நாலடியார்)

  என்றார் பிறரும்.