|
இ
இடுகையாய் இருக்கும்,’ என்ன, ‘தான் பிறந்து வளருகிற ஊரிலே ஒரு பொருளை வேறு ஒரு தேவதை கொள்ளுகையாகிற இது 1மஹிஷீ
ஸ்வேதம் பிறரதானதைப் போன்றது’ என்று பார்த்து, 2‘அவ்வாகாச வாயனுக்கோ இடுவது?
நமக்கும் மழைக்கும் காற்றுக்கும் இடம் தந்து பசுக்களுக்கும் புகலாய்ப் புல்லும் தண்ணீரும் உண்டாய்
இருக்கிற இம்மலைக்கு அன்றோ இடுவது?’ என்று அருளிச்செய்ய, ஆயர்கள் ஆகையாலே ‘அப்படியே செய்வோம்’
என்று அவர்களும் இசைந்து, துன்னு சகடத்தாற்புக்க பெருஞ்சோற்றை அம்மலையைப்போன்று குவித்தார்கள்;
அதனை முழுதும், அப்படியே இருப்பது ஒரு வடிவைக்கொண்டு, ‘கோவர்த்தநோஸ்மி - கோவர்த்தனமாய்
இருக்கிறேன்’ என்று அழுது செய்துவிட்டான்; உண்ண இருந்தவன் உண்ணப் பெறாமையாலும் பசிக்கோபத்தாலுமாகக்
கல் மழையைப் பெய்விக்க, ‘பாதுகாப்பது’ என்று சொன்ன மலையை எடுத்துப் பாதுகாத்தான். வீரராயிருப்பார்
3வினை முடுகினால் எதிரியுடைய ஆயுதந்தன்னைக் கொண்டு அவரை வெல்லுவார்களே அன்றோ?
அப்படியே, முன்னே நின்ற கல்லை எடுத்துக் கல் மாரியைக் காத்தான்.
அவன் செய்த தீங்கிற்குத்
தோளைக் கழிக்க வேண்டியிருக்க, ‘பாவி பசிக்கோபத்தாலே செய்தானாகில் செய்வது என்?
அசுரர்கள் பக்கல் செய்யுமதனை இவனோடு செய்ய ஒண்ணாது; தானே கையோய்ந்து போகிறான்!’ என்று,
அவனால் வந்த நலிவைக் கணக்கிட்டு ஏழு நாள் ஒருபடிப்பட்ட மலையை எடுத்துக்கொண்டு நின்றானாயிற்று.
‘கல்லை எடுத்துக் 4கல் மாரி காத்து’ என்னும் இவ்விடத்தில் ‘நீராலே வர்ஷித்தானாகில்
கடலை எடுத்துக் காக்கு
____________________________________________________
1. ‘மஹிஷீ ஸ்வேதம்
பிறரதானதைப் போன்றது,’ என்றது, ‘மனைவிக்குச்
செய்யும் சேவையைத் தான் செய்யாது பிறரைக்கொண்டு
செய்விப்பதைப்
போன்றதாகும்’ என்றபடி. மஹிஷீ ஸ்வேதம் - மனைவியின் வியர்வை
2. ஆகாசவாயன் -
ஆகாசத்தை இருப்பிடமாகவுடையவன்; இந்திரன்.
‘இருப்பிடம் இல்லாதவன்’ என்பது தொனி.
3. வினை
முடுகினால் - யுத்தத்தில் காரியம் கிட்டி வந்தால்.
4. இவ்விடத்தில்,
‘கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும்’ என்றவிடத்தில்
எழுதியுள்ள வியாக்கியானத்தைத்
காண்க.
(திருநெடுத்தாண். 13)
|