முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
16

சிலவும், புண்ணிய பாவங்களாலேயாயிருத்தல் சிலவுமாக இருப்பனவாமன்றோ? எங்கும் நிறைந்தவனாய் உலகமே உருவனாயிருக்கிற இறைவன் சரீரத்தை மேற்கொள்ளுவது, 1‘காண வாராய்’ என்று விடாய்த்திருப்பார் கண்டு அனுபவிக்கைக்குத் தண்ணீர்ப் பந்தல் வைத்தபடியேயாம் என்றபடி. 2தேவரீருடைய திவ்விய மங்கள விக்கிரகமும் தேவரீருக்கன்று; தேவர் அடியர்களுக்காகவே பிரகாசிக்கின்றீர்,’ என வருதல் காண்க.

    வருந்தாத ஞானமாய் - ஒரு சாதனத்தைச் செய்தாதல் மயர்வற மதிநலம் அருளப்பெற்றாதல் வந்ததன்றி, ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனாய். வரம்பின்றி முழுது இயன்றாய் - எல்லையில்லாத எல்லாப் பொருள்களையும் நிர்வஹித்தாய். இயலுகை - நிர்வஹிக்கை. ‘உடையவனாதலின் உடைமையை நிர்வஹிக்கிறான்,’ என்றபடி. உடையவனாய்க் கடக்க நிற்கையன்றி நோக்கும்படி சொல்லுகிறார்

    மேல் : வருங்காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவன் - ‘முக்காலத்திற்கும் நிர்வாஹகனாய் உலகங்களை ஒருபடிப்படக் காத்துக்கொண்டு செல்லுகிற உன்னுடைய கல்யாண குணங்களை என்னாலே முடியச் சொல்லித் தலைக்கட்டலாயிருந்ததோ? இல்லை,’ என்றபடி.

    ‘உன்னுடைய திவ்விய மங்கள விக்கிரகத்தின் வைலக்ஷண்யம் அது; எல்லாப்பொருள்களையும் ஒரே காலத்தில் காட்சிக்கு இலக்கு ஆக்கும் ஆற்றலுடையவனாயிருக்கிற இருப்பு அது; பாதுகாக்குந்தன்மை அது; ஏதென்று பேசித் தலைக்கட்டுவன்?’ என்கிறார்.

(5)

228

ஓதுவார் ஓத்துஎல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதுஇல்லை;
போதுவாழ் புனந்துழாய் முடியினாய்! பூவின்மேல்
மாதுவாழ் மார்பினாய்! என்சொலியான் வாழ்த்துவனே!

________________________________________________

1. திருவாய்மொழி, 8. 5 : 2.

2. ஜிதந்தா ஸ்தோத்திரம், 5. இச்சுலோகம், அடியார்கள் அனுபவிப்பதற்காகவே
  இறைவன் திவ்விய மங்கள விக்கிரகத்தை மேற்கொள்ளுகிறான் என்பதற்கு
  மேற்கோள்.