முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
166

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘அடியார்களுடைய விரோதிகளை அழிக்கும்பொருட்டு அசாதாரண திவ்ய ரூபத்தோடு கூடினவனாய்க்கொண்டு திருவவதாரம் செய்த குணத்தை அநுசந்தித்தால் உள்ளமும் செயலும் வேறுபடாதார் மக்கள் ஆகார்,’ என்கிறார்.

    சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு - சாது சனத்தை நலிந்த கஞ்சனை அழிக்கைக்காக; ‘சாதுசனம்’ என்றது, ஸ்ரீ வசுதேவரையும் தேவகியாரையும். ‘கஞ்சன் இவர்களை நலிந்தானோ?’ எனின், 2‘தந்தையாக அடைய வேண்டும் என்று நிச்சயித்தார்’ என்று தான் அவதரிக்க நினைத்த இவர்களையன்றோ அவன் நலிந்து நெடுநாள் சிறையிட்டு வைத்தது? 3‘சாதுக்களுடைய நலத்திற்காகவும் துஷ்டர்களுடைய நாசத்திற்காகவும் தர்மத்தை நிலை நிறுத்தும்பொருட்டும் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன்’ என்கிற பிரமாணப் பிரசித்தியைப் பற்ற ‘சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்குப் பிறந்த வேத முதல்வன்’ என்கிறார்.

    ஆதி அம் சோதி உருவை - இவ்வருகு உண்டான காரியவர்க்கத்துக்கு எல்லாம் ஊற்றாய், ஞானம் முதலிய குணங்களுக்குப் பிரகாசகமாய், ‘குணங்களின் கூட்டமே விக்ரஹம்’ என்று மயங்குவார்க்கும் மயங்கலாம்படியேயன்றோ திருமேனிதான் இருப்பது? அங்கு வைத்து இங்குப் பிறந்த - அங்கு இருந்தபடியே வைத்துக்கொண்டு இங்கே வந்து பிறந்த; 4‘என்னுடையதான தன்மையை நிலைக்களமாகக் கொண்டு என்னுடைய சங்கற்பத்தினால் அவதரிக்கிறேன்,’ என்றான் ஸ்ரீ கீதையில். ‘நித்திய விபூதியில் உள்ளார் 5அனுபவிக்கிறபடியே லீலா விபூதியில் உள்ளாரும்

_____________________________________________________

1. ‘கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப்
  பிறந்த வேதமுதல்வனைப் பாடித் துள்ளாதார் மனிசரே?’ என்றதனைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார். 

2. ஸ்ரீராமா. பாலகாண். 77 : 26.

3. ஸ்ரீகீதை, 4 : 8. இது, ‘சாதுக்களைக் காத்தற்கும் துஷ்டர்களைக்
  கொல்லுதற்கும் அவதரிக்கிறான்,’ என்பதற்குப் பிரமாணம்.

4. ஸ்ரீகீதை, 4 : 6.

5. ‘அனுபவிக்கிற படியே’ என்றது சிலேடை; அனுபவிக்கிற பிரகாரமும்,
  அனுபவிக்கிற திருமேனியும்.