|
ப
படியே, கர்ப்பத்தில்
சம்பந்தமில்லை. ‘இதுதான் கூடுமோ?’ என்ன ஒண்ணாது; ‘என்னை?’ எனின், இக்ஷ்வாகு வமிசத்திலே
யுவநாஸ்வான் என்பான் ஒருவன் மந்திரத்தாலே சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க,
அவன் வயிற்றிலே கர்ப்பம் உண்டாயிற்றேயன்றோ ஒரு சத்தி விசேஷத்தாலே? அங்கு ஆணும் பெண்ணுமாய்க்
கலந்து பிறந்தமை இல்லையே? அப்படியே, இங்கும் சர்வ சத்தி யோகத்தாலே இவ்வர்த்தம் பொருத்தமாகத்
தட்டு இல்லையேயன்றோ? இதற்குப் பிரமாணம் 1‘அஜாயமாந:’ என்ற சுருதியேயன்றோ?
அதனைச் சொல்லுகிறார் மேல்:
வேத முதல்வனைப்
பாடி - வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பாடி; அன்றி, ‘வேதங்களாலே முதல்வனாகச் சொல்லப்படுகின்றவனைப்
பாடி’ என்னுதல். ‘பிறந்த முதல்வனைப் பாடுகிறது என்? வளர்ந்த விதங்களையும் பாடலாகாதோ?’ எனின்,
‘பிறந்தவாறு எத்திறம்?’ என்னா, வளர்ந்தவாற்றில் போகமாட்டாதே அன்றோ இருப்பது? 2‘எத்திறம்!’
என்றால், பின்னையும் ‘எத்திறம்!’ என்னுமித்தனை. 3‘உபாசகர்கள் சர்வேசுவரனுடைய
அவதாரத்தைச் சுற்றும் சுற்றும் வாரா நிற்பர்கள்,’ என்கிறபடியே, அதனைச் சுற்றும் சுற்றும்
வாராநிற்குமத்தனை. வீதிகள்தோறும் துள்ளாதார் - மனிதர்கள் உள்ள பெருந்தெருவேயன்றி, குறுந்தெருவோடு
நெடுந்தொருவோடு ஆடாதார். 4இங்கே, மிளகாழ்வான் வார்த்தையை நினைப்பது.
‘இப்படி ஆடாதாருமாய், அறிவு கேடருமாய் இருப்
___________________________________________________
1. அஜாய மாநோ
பஹீதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி
யோநிம்.
(யஜூர் வேதம்)
இதற்குப் பொருள் மேலே
எழுதப்பட்டுள்ளது.
2. ‘ஒழிவில் காலம்
எல்லாம்’ என்ற பாசுரத்தில் எழுதியுள்ள
திருவரங்கப்பெருமாளரையர் ஈடுபாட்டினை இங்கு நினைவு கூர்க.
பக். 70,
3.
புருஷசூத்தம்.
இது, ‘அவதாரத்துக்கு
அவ்வருகே போகமாட்டாமல் அதிலே
ஈடுபட்டிருப்பர்கள்,’ என்பதற்குப் பிரமாணம்.
4. இந்த ஐதிஹ்யத்தை
இத்திருவாய்மொழியில் எட்டாம் திருப்பாசுரத்தின்
வியாக்கியானத்தில் காணலாகும். ‘துள்ளி
ஆடினால் உலகத்தார் சிரியாரோ?’
என்ன, அதற்கு விடையாக, ‘மிளகாழ்வான் வார்த்தையை நினைப்பது’
என்கிறார். இதனால், ‘உலகத்தாருடைய நகையே பூஷணமாய்விடும்,’ என்பது
கருத்து.
|