முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
170

கெ

கொள்ளாநின்றார்; ‘இது சேருகிறபடி யாங்ஙனம்?’ என்னில், 1இவ்வாகாரமும் கிடக்கச்செய்தே, 2வேறு ஆகாரம் தோற்றாதபடியான பாகம் பிறந்தவாறே, அவன் உடைமை என்னும் தன்மையே தோற்றி, மேல் திருவாய்மொழியில் உபாதேயம் என்று அநுசந்தித்தார். 3‘இவர்தாம் எல்லார் படிகளும் உடையராயன்றோ இருப்பது? முத்தர் படியையுடையர் என்னுமிடம் சொல்லிற்று மேல் திருவாய்மொழியாலே. முமுக்ஷீக்கள் படியையுடையர் என்னுமிடம் சொல்லுகிற இத்திருவாய்மொழியாலே,’ என்று அருளிச்செய்வர்.

272

மனிசரும் மற்றும் முற்றும்ஆய்
    மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
    தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின்இன் சாற்றைக்
    கட்டியைத் தேனை அமுதை
முனிவுஇன்றி ஏத்திக் குனிப்பார்
    முழுதுஉணர் நீர்மையி னாரே.

    பொ-ரை : மனிதர்களும் தேவர்களும் விலங்கு தாவரங்களுமாகி ஆச்சரியமான இப்பிறவிகளிலே பிறந்த தனியனும், பிறப்பு இல்லாதவனும், பெரிய கடலிலே சேர்ந்திருக்கின்ற உபகாரகனும், பழம் கரும்பின் சாறு சாற்றின் கட்டி தேன் அமுது இவை போன்ற இனியனுமான எம்பெருமானை வெறுப்பு இல்லாமல் துதித்து ஆனந்த மேலீட்டினால் நடனம் செய்யுமவர்கள் எல்லாவற்றையும் அறிந்த அறிவுள்ளவர்கள் ஆகின்றார்கள்.

    வி-கு : ‘ஆகிப் பிறந்த தனியன்’ என்க. முழுது உணர் நீர்மையினார்-முற்றறிவினர். குனிப்பார்-வினையாலணையும் பெயர்,

_____________________________________________________ 

1. இவ்வாகாரமும் - முமுக்ஷீவின் தன்மை.

2. ‘வேறு ஆகாரம் தோற்றாதபடியான பாகம் பிறந்தவாறே’ என்றது, முத்தர்
  நிலையைக் குறித்தபடி. உபாயம் - ஏற்றுக்கொள்ளத் தக்கது. இங்கே,
  இத்திருவாய்மொழியின் முன்னுரையில் கூறப்பட்டதனை நினைவு கூர்க. 

3. ‘முமுக்ஷீவின் தன்மை கிடக்கச்செய்தே முத்தர் நிலை உண்டாகக் கூடுமோ?’
  என்னும் வினாவிற்கு விடையாக, ‘இவர்தாம்’ என்று தொடங்கி, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார். இங்கே. திருவாய்மொழி, முதற்பத்து அவதாரிகை
  ‘திருமகள் கேள்வன் ஒன்று’ பக். 16 - 22, பார்க்க.