|
என
என்கோ!’ என்று தொடங்கி
அனுபவித்த இனிமை பின் நாடின படி இது.
முனிவு இன்றி ஏத்திக்
குனிப்பார் - பகவானுடைய குணங்களைக் கேட்டால் அசூயை பண்ணாமல் ஏத்திக் குனிப்பவர்கள்;
‘ஆனால் ஈசுவரனிடத்தில் அசூயை பண்ணுவர்களோ?’ எனின், தன்னைப் போல்வான் ஒருவனுக்கு ஓர் உயர்வு
சொல்லுகையன்றிக்கே, ஈசுவரனுக்கு ஓர் உயர்வு சொன்னால் அது பொறாதேயன்றோ இருப்பது? குணம் கண்ட
இடத்தே குற்றங்களை ஏற்றுகிறவர்கள் பலரேயன்றோ? ஆதலால், 1அவதார சௌலப்யமாகிற
இம்மஹா குணத்திலே இறைமைத்தன்மை இல்லை என்ற குற்றத்தை ஏற்றாமல் என்கிறார். 2‘நம்முடைய
சொரூப ரூப குண விபூதிகளைச் சொன்னவிடத்தில் சிவீல் என்று இருந்திலை; உன்தனை அதிகாரிகளைக்
கண்டிலோம்; இன்னம் சொல்லிச் சொல்லாதவைகளையும் சொல்லும்படி கிட்ட வாராய்,’ என்றானேயன்றோ
ஸ்ரீ கீதையில்?
‘ஆனால், அனுகூலர்
அசூயை பண்ணுவர்களோ?’ எனின், 3சங்கநிதி பதுமநிதிகளைக் கொண்டு வந்து கொடுத்து,
கடலைச் செறுத்துப் படைவீடு செய்து, தங்கள் எதிரிகளோடே புறப்பட்டு மார்விலே அம்பு ஏற்று, இப்படி
ரக்ஷியாநின்றால், 4சோறு சுட்டவாறே, ‘இது ஒரு கிருஷ்ணனும், நடுவில் பெருங்குடியாட்டமும்
என் என்பதுதான்?’ என்னாநிற்பர்கள். மேலும், ‘காக்குந் தன்மை என்பது ஒரு சொல் அளவேயாய்
இவர்களுக்கே தாழ்வு செய்து திரிந்தேன்; நல்லது கண்டால், எனக்கு என்று இராமல் பகுத்திட்டு
ஜீவித்துப் போந்தேன்; இங்ஙனம் இருக்கவும், இவர்கள்
_____________________________________________________
1. அவதார சௌலப்ய
குணத்தைக் கூறியது, மற்றைக் குணங்கட்கும்
உபலக்ஷணம்.
2. ஸ்ரீ கீதை, 9 :
1. பொறாமையில்லாதவர் அரியர் என்பதற்குப் பிரமாணம் இது.
சிவீல் என்றிருந்திலை - அசூயை
கொண்டிலை.
3. அநுகூலர் அசூயை
பண்ணுவர்கள் என்பதற்கும், மூன்று உதாரணங்கள்
காட்டுகிறார், ‘சங்கநிதி பதுமநிதி’ என்று தொடங்கி.
‘கடலைச் செறுத்துப்
படைவீடு செய்து’ என்றதன் பொருளை.
‘அதிரப்
பெரும்போர் அஞ்சினனோ அஞ்சா மைகொலோ தெரியாது
மதுரைப் பதியும்
தன்கிளையும் வாழ்வுந் துறந்து வாரிதிவாய்
எதிரொப் பிலாத
துவாரகையென் றியற்பேர் படைத்த மாநகரின்
முதிரப்
பொரும்போர்த் தம்முனுட னிருந்தான் பன்னான் முரணறுத்தே.’
என்ற செய்யுளால் உணரலாகும்
(வில்லி பாரதம்)
4. சோறு சுட்டவாறே
- மிகச்சிறிய காரணத்தால், ‘என் என்பது தான்?’ என்றது,
‘என்ன?’ என்றபடி.
|