|
கூறும
கூறும் கொடுஞ்சொற்களை எல்லாம் பொறுத்துப் போந்தேன்,’ என்றான் அன்றோ? மேலும், 1ஒரு மணி கெட்டு
யாரேனும் கொண்டுபோக, கிருஷ்ணன் தலையிலே ஏறிட, நம்பி மூத்தபிரானும் இது சுட்டித் தீர்த்தயாத்திரை
போகவேண்டும்படி இருந்ததேயன்றோ?
இனி, ‘முனிவு இன்றி
ஏத்திக் குனிப்பார்’ என்பதற்கு, முனிவாகிறது, வெறுப்புத் தன்மையாய், அது இன்றிக்கே ஒழிகையாவது,
கலங்குகையாய், அடைவு கெட்டு ஏத்திக் குனிப்பார் என்று பொருள் கூறுவாரும் உளர். முழுது உணர் நீர்மையினாரே
- ‘ஒன்றை (பரம்பொருளை) அறிந்ததனாலே எல்லாம் அறிந்தவர் ஆகிறார்கள்,’ என்கிறபடியே,
அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள் ஆகிறார்கள்; அவர்கள் முற்றறிவினர்கள் ஆகிறார்கள்:
ஞானபலமான இது உண்டான போதே ஞான விசேடத்தில் இல்லாதது இல்லையன்றே? ‘ஆயின், மனத்தின்கண்
உள்ள ஞானத்தை அறிந்தவாறு என்?’ எனின், அவர்கள் சரீரத்தில் பிறந்த விகாரத்தைக்கொண்டே
அவர்களுடைய ஞானமிகுதியை அறியலாம்.
(6)
273
நீர்மைஇல் நூற்றுவர்
வீய
ஐவர்க்கு
அருள்செய்து நின்று
பார்மல்கு சேனை
அவித்த
பரஞ்சுட ரைநினைந்து
ஆடி
நீர்மல்கு கண்ணினர்
ஆகி
நெஞ்சம் குழைந்துநை
யாதே
ஊன்மல்கி மோடு
பருப்பார்
உத்தமர் கட்குஎன்செய்
வாரே!
_____________________________________________________
1. ‘ஒரு மணி கெட்டு
யாரேனும் கொண்டு போக’ என்றது, சமந்தகமணி
விருத்தாந்தத்தைக் குறித்தது. இதனை, பாகவதம்,
சத்தியபாமை மணம்புரி
அத்தியாயத்தால் உணரலாம்.
நம்பி மூத்தபிரான்
- பலராமன்; நம்பிக்கு மூத்தவன், நம்பி -
கிருஷ்ணன். ‘ஒருகுழை ஒருவன்போல் இணர் சேர்ந்த மராமும்’ (கலித். 26.)
என்றவிடத்து, ‘நீர் பொருகின்ற கரையில் நிற்கும் ஒரு பூங்குழயையுடைய
நம்பி
மூத்தபிரானைப்
போலப் பூங்கொத்துகள் நிரம்பின
வெண்கடம்பும்’
என்று உரை எழுதுவர் நச்சினார்க்கினியர்.
|