முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
176

நெற

நெற்றியைக் கீறிப் பார்த்த இடத்தில் இரத்தம் பொசியாமையாலே, ‘அவர்களை அழியச் செய்வோம்,’ என்று பார்த்தான். 1பாண்டவர்களைப் பாதுகாத்தற்குக் காரணம், ‘நாங்கள் பந்துக்களையொழிய ஜீவிப்பது இல்லை’ என்றது. 2’நம்மால் இராச்சியமும் போகங்களும் சுகங்களும் யாருக்காக விரும்பப்படுகின்றனவோ’ என்றபடியே, 3‘நாட்டார் பொருள் தேடுவதும் இராச்சியங்கள் சம்பாதிக்கிறதும் எல்லாம் பந்துக்களும் தாங்களும் கூட ஜீவிக்கைக்கு அன்றோ? ஆன பின்னர், நாங்கள் பந்துக்களைக் கொன்று ஜீவிக்கப் பார்க்கிலோம் என்னும் நீர்மையாலேயாயிற்று; அவர்கள் இங்ஙன் அன்றிக்கே, ‘இவர்களுக்கு 4ஒரு கோல் குத்து நிலமும் கொடுப்பது இல்லை; அவர்கள் ஜீவிக்கில் நாங்கள் ஜீவியோம்,’ என்ன, ‘இவர்கள் அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் இருந்தார்கள்; இவர்களை அழியச் செய்யாவிடின் விபூதியும் அழியும்,’ என்று பார்த்து அதற்குத் தகுதியாக ஒருப்பட்டான்,’ என்றபடி.

    ஐவர்க்கு அருள் செய்து - தான் அல்லது தஞ்சம் இல்லாத பாண்டவர்களுக்கு. 5‘பாண்டவர்கள் கண்ணனையே சரணமாக அடைந்தவர்கள்; கண்ணனையே துணையாக உடையவர்கள்; கண்ணனையே நாதனாக உடையவர்கள்; பூர்ணசந்திரன் நக்ஷத்திரங்களுக்குத் தலைவனாய் இருத்தலைப் போன்று, அந்தப் பாண்டவர்களுக்குக் கண்ணன் சிறந்த உபாயமாய் இருக்கிறான்,’ என்பது பாரதம். 6‘மூன்று உலகங்கட்கும் நாதனும் ஜனாத்தனனுமான கிருஷ்ணன், தர்மபுத்திர

____________________________________________________ 

1. ‘பாண்டவர்களைப் பாதுகாத்தற்குக் காரணம், அவர்களுடைய நீர்மை’ என்று
  அதனை விரிக்கிறார், ‘பாண்டவர்களை’ என்று தொடங்கி.

2. ஸ்ரீ கீதை, 1 : 33.

3. இங்குக் கூறப்படும் பகுதியைக் கிருஷ்ணன் தூதுச் சருக்கத்தில் 4, 6, 8, 17,
  18 எண்ணுள்ள செய்யுள்களில் காணலாகும்.

4. ‘ஒரு கோல் குத்து நிலமும் கொடுப்பது இல்லை’ என்னும் இவ்விடத்தில் ‘ஈ
  இருக்குமிடம் எனினும் இப்புவியில் யான் அவர்க்கு அரசு இனிக்கொடேன்!’
  என்ற வில்லி பாரதம் ஒப்பு நோக்கலாகும். கோல் - அம்பு.

5. பாரதம், துரோண பர். 183. 24. இது, வேறு தஞ்சம் இல்லாமைக்குப்
  பிரமாணம். இவ்விடத்தில், வில்லி பாரதம், பதினேழாம் போர்ச்சருக்கம், 8
  முதல் 16 முடிய உள்ள செய்யுள்களைப் படித்து இன்புறத்தகும்.

6. ‘மூன்று உலகங்கட்கு நாதனும்’ என்று தொடங்கும் பகுதி, பாரதம், ராஜசூய
  யாகத்தில் சஞ்சயன் வார்த்தை.