முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
178

கெ

கொள்வதற்கு உசாத்துணை ஆவார்களோ? ‘பிறப்பிற்குப் பிரயோஜனம் வைஷ்ணவர்களுக்கு உறுப்பாமதுவே,’ என்கிறார்.

    1ஈசுவரன், தன்னையும் தன் விபூதியையும் அடியார்களுக்கு உடைமையாக்கியன்றோ வைப்பது? 2ஆயிரத்தளியிலே இராஜா இருக்கச்செய்தே பெரிய நம்பியையும் ஆழ்வானையும் நலிந்தானாய், ஆழ்வான் மடியிலே சாய்ந்து கிடக்கச்செய்தே, பெரிய நம்பி திருநாட்டுக்கு எழுந்தருளினார்; அவ்வளவிலே ‘ஒருவரும் இல்லாதாரைத் தகனம் பண்ணக்கடவோம்,’ என்று திரிகிறார் சிலர் அங்கே வந்து, ஆழ்வானைக் கண்டு, ‘ஒருவன் உண்டிறே’ என்று போகப் புக, ஒருவரையும் ஒரு குறை சொல்லியறியாதவன், ‘வாரிகோள் மாணிகள்! வைஷ்ணவனுமாய் ஒருவனும் இல்லாதான் ஒருவனைத் தேடிப் பிரதிபத்திபண்ண இருக்கின்றீர்களோ நீங்கள்? ஈசுவரனும் ஈசுவர விபூதியும் வைஷ்ணவனுக்குக் கிஞ்சிக்கரிக்க இருக்க, வைஷ்ணவனுமாய் அறவையுமாயிருப்பான் ஒருவனை நீங்கள் எங்கே தேடுவீர்கள்?’ என்றானாம்.

(7)

274

வார்புனல் அம்தண் அருவி
    வடதிரு வேங்கடத்து எந்தை
பேர்பல சொல்லிப் பிதற்றிப்
    பித்தர்என் றேபிறர் கூற
ஊர்பல புக்கும் புகாதும்
    உலோகர் சிரிக்கநின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
    அமரர் தொழப்படு வாரே.

    பொ-ரை : ‘ஒழுகுகின்ற தண்ணீரையுடைய அழகிய குளிர்ந்த அருவிகள் நிறைந்த வடதிருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எந்தையினுடைய பல திருப்பெயர்களைச் சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்று பிறர் கூறும்படி பல ஊர்களிலே புகுந்தும்

____________________________________________________ 

1. ‘பிறவிக்குப் பயன் இறைவனுக்கு உறுப்பாதலேயன்றோ?’ என்ன, ‘ஈசுவரன்’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. அடியார்களுக்கு உடைமை ஆக்கி வைக்கும் என்றதற்கு ஐதிஹ்யம்
  காட்டுகிறார், ‘ஆயிரத்தளியிலே’ என்று தொடங்கி. ஆயிரத்தளி - பழையாறை
  - நாதன்கோயில் - நந்திபுரவிண்ணகரம் என்னும் தலம். இங்கே சோழர்களும்,
  பின்னர்ப் பல்லவர்களும், பின்னர்ச் சோழர்களும் சில காலம் இருந்து
  அரசாண்டனர். இராஜா - கி.பி. 11ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்த
  சோழ அரசன்.