|
அற
அறியமாட்டேன் யாவையும்
எவரும் தானே’ என்பதாகாநின்றார்; இவர் பித்தரோ?’ என்று தம்மைப் பிறர் சொல்லுமாறு போன்று
‘இவர்கள் பித்தரோ?’ என்று சொல்லும்படி.
1‘அத்தா
அரியே என்று உன்னை அழைக்கப் பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை’ என்றும், 2‘பேயரே
எனக்கு யாவரும்; யானும் ஓர் பேயனே எவர்க்கும்’ என்றும் சொல்லுகிறபடியே, அவர்கள் செயல் இவர்கட்கு
அடைவு கேடாய்த் தோன்றுமாறு போன்று, இவர்கள் செயலும் அவர்கட்கு அடைவு கேடாய்த் தோன்றுமே
அன்றோ? வைஷ்ணவர்கள் அங்கீகாரம் பெறுமதிலும் வைஷ்ணவர்கள் அல்லாதார் ‘இவன் நமக்கு உடல்
அல்லன்’ என்று கைவிடுகைதான் உத்தேஸ்யமாதலின்,
‘பிறர் கூற’
என்கிறார். இராவணன்
3‘இராக்கதர் குலத்தில் தள்ளுண்ட உன்னை’ என்றதனை உத்தேஸ்யமாக நினைத்திருந்தான்
அன்றோ ஸ்ரீ விபீஷணாழ்வான்? 4மிளகாழ்வான்
வார்த்தை:
இராஜா அகரம் வைக்கிறானாய் அங்கே செல்ல, ‘உமக்குப் பங்கு இல்லை’ என்ன, ‘அது என்? வேதபரீக்ஷை
வேணுமாகில் அத்தைச்செய்வது, சாஸ்திரப் பரீட்சை வேணுமாகில் அத்தைப் பரீக்ஷிப்பது,’ என்ன,
‘உமக்கு அவையெல்லாம் போதும்; அதற்கு உம்மைச்
___________________________________________________
1.
பெரிய திருமொழி, 7,
1 : 8.
2.
பெருமாள் திரு.
3 : 8.
'மாணிக் கனகம் புரைமேனி
மாலுக்கு வார்சடையோன்
பாணிக் கனகம் பலியொழித்
தானுக்குப் பச்சைத்துழாய்
ஆணிக் கனக முடியலங்
காரனுக்கு அண்டமெல்லாம்
பேணிக் கனகனுக்
குப்பித்த ரானவர் பித்தரன்றே.’
என்றார்
திவ்வியகவியும்
(அழகரந்.)
3.
ஸ்ரீராமா. யுத். 16 :
15. இது, மேலே
கூறியதற்கு உதாரணம்.
‘அஞ்சினை யாதலின்
அமர்க்கும் ஆளலை
தஞ்சென மனிசர்பால்
வைத்த சார்பினை
வஞ்சனை மனத்தினை பிறப்பு
மாற்றினை
நஞ்சினை யுடன்கொடு வாழ்தல்
நன்றரோ.’
(கம்பரா. விபீ. 9)
என்னும் இச்செய்யுள்
சுலோகப் பொருளோடு ஒருபுடை ஒப்புமையுடையது.
4. மேலதற்கே ஓர்
ஐதிஹ்யம் காட்டுகிறார், ‘மிளகாழ்வான் வார்த்தை’ என்று
தொடங்கி. அகரம் - அக்கிரஹாரம்.
|