|
செ
சொல்லவொண்ணாது,’ என்ன,
‘ஆனால், எனக்குக் குறை என்?’ என்ன, நீர் வைஷ்ணவர் அன்றோ? ஆகையாலேகாண்,’ என்ன,
புடைவையை முடிந்து ஏறிட்டுக் கூத்தாடினான் ஆயிற்றுத் தன்னை அவர்கள் கைவிட்டதற்கு; ஆதலால், வைஷ்ணவர்
அல்லாதாரான மற்றையோரால் ‘இவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்’ என்று தள்ளப்படுவதே வேண்டுவது.
1ஊர்
பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி ஆர்வம் பெருகக் குனிப்பார் - மனிதர்கள் உள்ள
இடத்தோடு இல்லாத இடத்தோடு வாசியற எங்கும் புக்கு, இவ்வாசியறியாத உலகத்தார், ‘இவன் செய்யும்படி
என்?’ என்று சிரிக்க, அதுவே தாளமாக நின்று ஆடி, அன்பானது மேன்மேல் எனக் கரை புரண்டு குனிக்குமவர்கள்.
அமரர் தொழப்படுவாரே - நித்திய சூரிகளாலே கொண்டாடப் பெறுவர். ‘பகவானுடைய சந்நிதியிலே
இருந்து 2’அஹமந்நம் அஹமந்நம்’ என்கிறபடியிலே இருந்து களித்தாடுவது பாடுவதான நித்தியசூரிகள்
இவர்களைக் கொண்டாடுவார்கள்,’ என்கிறார்.
(8)
275
அமரர் தொழப்படு
வானை
அனைத்துஉல
குக்கும் பிரானை
அமர மனத்தினுள்
யோகு
புணர்ந்துஅவன்
தன்னோடுஒன் றாக
அமரத் துணியவல்
லார்கள்
ஒழியஅல் லாதவர்
எல்லாம்
அமர நினைந்துஎழுந்து
ஆடி
அலற்றுவ
தேகரு மம்மே.
பொ-ரை :
அமரர்களாலே
தொழப்படுகின்றவனை, எல்லா உலகத்தார்க்கும் உபகாரகனை, நிலையாக மனத்தினால் யோகத்
_____________________________________________________
1. ‘தேடு
கின்றனை ஐம்பொறி களுக்கிரை; தேடியுங் கிடையாமல்
வாடு கின்றனை;
வீடுசென் றென்றினி மருவுவை மடநெஞ்சே!
ஆடு
கின்றிலை; அழுகிலை; தொழுகிலை; அரங்கனைக் கரங்கூப்பிப்
பாடு
கின்றிலை; நினைகிலை பதின்மர்தம் பாடலின் படியாயே.’
என்பது திவ்வியகவியின்
செய்யுள்.
(திருவரங்கக்கலம்பகம்)
2.
தைத்திரீய உபநிட. பிரு.
10. ‘நான்
பரமாத்துமாவுக்கு இனியன்: நான்
பரமாத்துமாவாகிய இனிமையை அனுபவிக்கிறவன்,’ என்பது பொருள்.
|