|
New Page 1
தைச் செய்து அவ்விறைவனோடு
சமமாக அமரத் துணிய வல்லவர்களான கேவலர்களை ஒழிய, மற்றையோர் எல்லாம் அமர வேண்டும் என்று
நினைந்து எழுந்து ஆடிப் பாடுவதே செய்யத் தக்க காரியமாம்.
வி-கு :
பிரானை மனத்தினுள்
யோகு புணர்ந்து அவனோடு சமமாக அமரத் துணிய வல்லவர் - கேவலர். ஒன்றாக - சமமாக. ‘அல்லாதவர்
எல்லாம் நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமம்.’ என முடிக்க. அலற்றுவது - தொழிற்பெயர்.
ஈடு :
ஒன்பதாம் பாட்டு.
‘கைவல்ய புருஷார்த்தத்தை எடுத்து, 1’சீலம் முதலான குணங்களோடு கூடின இறைவனைப் பற்றாமல்
மின்மினிபோலே இருக்கிற ஆத்தும அனுபவமாத்திரத்திலே நிற்பதே!’ என்று அவர்கள் செயலுக்கு இரங்கி,
அவர்களை ஒழிந்தாரை எல்லாம் பகவானுக்கு வேறுபட்ட இலாபங்களைப் ‘புருஷார்த்தம்’ என்று இராமல்,
பகவானுடைய குணங்களை அநுசந்தித்து உரையும் செயலும் வேறுபட்டவராய் ஆடுவது பாடுவது ஆகுங்கோள்;
இதுவே செய்யத்தக்க காரியம்,’ என்கிறார்.
அமரர் தொழப்படுவானை
- பிரமன் உருத்திரன் முதலியோர்கட்கும் அவ்வருகான நித்தியசூரிகளாலே தொழப்படுகிறவனை. அனைத்து
உலகுக்கும் பிரானை - எல்லா உலகங்கட்கும் இறைவனை. அமர மனத்தினுள் யோகு புணர்ந்து - நெஞ்சிலே
ஊன்றியிருக்கும் படி யோகாப்பியாசத்தைக் கனக்கப்பண்ணி. அவன்தன்னோடு ஒன்றாக அமரத் துணிய
வல்லார்கள் ஒழிய - இறுதிக்காலத்தில் வந்தவாறே, அவனோடே இவ்வாத்துமவஸ்து சமானம் என்று
புத்தி பண்ண வல்ல தாழ்ந்தவர்களை ஒழிய. ‘ஒன்றாக’ என்பதற்குச் ‘சமானமாக’ என்பது பொருள்.
‘‘ஒன்றாக’ என்பது, சமானம் என்னும் பொருளைக் காட்டுமோ?’ என்னில், 2‘எல்லாப்
பொருள்களிலும் இருக்கிற என்னை எவன் ஒருவன்
ஒன்றாக இருக்கும் தன்மையை
அடைந்தவனாய்ப்
பூஜிக்கின்றானோ, அவன் எப்பொழுதும் என்னிடத்திலே இருக்கிறான்,’ என்று ஒன்றாயிருக்குந்தன்மையைச்
சொல்லி, பின்னர் அதுதன்னை
____________________________________________________
1. மேல் பாசுரத்தில்
‘வேங்கடத்து எந்தை’ என்றதனை நோக்கிச் ‘சீலம்
முதலான குணங்களோடு கூடின இறைவனை’ என்கிறார்.
இப்பாசுரத்தில்
இரண்டாமடியைத் திருவுள்ளம் பற்றி, ‘ஆத்துமாநுபவமாத்திரத்தில் நிற்பதே!’
என்கிறார்.
‘நாம் முமுக்ஷீக்கள் அன்றோ?’ என்கிற துர்அபிமானம்
கேவலர்க்கு இருக்கையாலே அவர்களிடத்தில்
உபதேசம் பயன்படாது என்று
கருதி, ‘அவர்களை எல்லாம்’ என்கிறார்.
2.
ஸ்ரீ கீதை, 6 : 31.
இது, ஸ்ரீ
கிருஷ்ணன் கூற்று.
|