|
ம
மீண்டும் எடுத்துச்
சொல்லும் இடத்தில் 1‘மதுசூதநா! எந்த யோகமானது
சமமாக உள்ள தன்மை
என்று உன்னால்
சொல்லப்பட்டதோ, அது செய்ய முடியாததாய் இருக்கிறது,’ என்று ‘சமமாக உள்ள தன்மை’ என்று
சொல்லப்பட்டதன்றோ? ஆக, இறுதிக்காலத்தில் இவ்வாத்துமா அவனோடு ஒத்த சுத்தியை உடைத்தாக
நினைக்க வல்ல துணிவுள்ள கேவலரை ஒழிய’ என்றபடி.
இனி, 2இவ்விடத்தில்,
‘விலக்ஷண அதிகாரிகளைச் சொல்லிற்றாக்கி, 3‘அல்லாதவரெல்லாம்’ என்கிற இடம்,
பத்தி செய்ய அதிகாரம் இல்லாதவர்களெல்லாம் அவனை அநுசந்தித்துப் பாடுவது ஆடுவது ஆகுங்கோள்
என்பதனைக் கூறுகின்றது என்று பொருள் கூறினாலோ?’ என்னில், அங்ஙனம் கூற ஒண்ணாது; மேலே ‘ஓதி
உணர்ந்தவர் முன்னா’ என்றதனால், பகவானுடைய குணங்களைக் கேட்டால் வேறுபடாது இருப்பவர்களாயின்,
அவர்கள் பிறவி தொழில் முதலியவற்றால் எத்தனையேனும் நன்மையுடையராகில் அவர்கள் மக்கள் அல்லர்
என்றும் சொல்லி, பிறவி தொழில் முதலியவற்றால் தண்ணியரேயாகிலும் பகவானுடைய குணங்களை அநுசந்தானாம்
பண்ணி வேறுபாட்டினையடையும் தன்மையராகில் அவர்கள் ‘முழுதுணர் நீர்மையினார்’ என்றும் சொல்லி
இவர்களைக் கொண்டாடியும் 4அவர்களை ‘என் சவிப்பார்
_____________________________________________________
1.
ஸ்ரீகீதை, 6
: 33.
இது,
அருச்சுனன்
கூற்று.
இவ்விடத்தில், 31ஆம்
ஸ்லோகத்தில் ‘ஏகத்துவத்தைச் சொல்லி,
அதனையே, 33ஆம் சுலோகத்தில் ‘சாம்யேந’ என்று
கூறுவதால், ஒன்று
என்பதும், சமம் என்பதும் ஒரு பொருளைக் குறிப்பனவாம் என்றபடி. ‘ஒன்று’
என்பது
உவமை உருபு; தொல். பொருள். சூ. 286 காண்க. ‘வேயொன்று
தோள் ஒருபால்’ என்றவிடத்து, ‘ஒன்று’
என்பது ‘சமம்’ என்ற பொருளில்
வந்துள்ளமை காணலாகும்.
2. ‘இவ்விடத்தில்’
என்றது, பாசுரத்தில் ‘அமரர் தொழப்படுவானை' என்றது
முதல் ‘அமரத் துணிய வல்லார்கள்’ என்றது
முடிய உள்ள பகுதியை,
விலக்ஷண அதிகாரிகள் - உபாசகர்.
3. ‘அல்லாதவர்
எல்லாம்’ என்ற பன்மையாலே ஐஸ்வரிய காமரையும்
நினைக்கிறது.
4. ‘அவர்களை’ என்றது,
ஓதியுணர்ந்தவர்களான விலக்ஷணர்களை.
‘சாதுசனத்தையும் நலியும், என்னும் மேல் பாசுரத்தில் விலக்ஷணர்களையும்
நிந்தித்துத் தள்ளுவதனால், இங்கு விலக்ஷணர்கள் என்று பொருள் கூறலாகாது
என்பது கருத்து.
|