|
மன
மனிசரே’ என்று நிந்தித்தும்
வருகிற இடம் ஆகையாலே, இங்கு, ‘சர்வேசுவரனை அடைந்து அற்பப் பிரயோஜனங்களைக்கொண்டு அகலப்போகிறவர்கள்
மக்கள் ஆகார்,’ என்றதே பொருள் ஆக வேண்டும். அல்லாதவர் எல்லாம் - கேவலம் ஆத்தும அநுசந்தானத்தைப்
பண்ணி, சீலம் முதலான குணங்களோடு கூடின இறைவனிடத்திலே நெஞ்சு போகாதபடி நெஞ்சை இறுகப்
பிடிக்க வல்ல தாழ்ந்தவர்கள் நீங்க மற்று உள்ளார் எல்லாம். அமர நினைந்து எழுந்து அலற்றுவதே
கருமம் - வேறு பிரயோஜனங்களைக் கருதாதவர்களாய் இறைவனை நெஞ்சிலே பொருந்த அனுசந்தித்து, அவ்வனுசந்தானத்தாலே
வந்து மகிழ்ச்சி கொண்டு கிளர, அக்கிளர்த்தியோடே ஆடி அடைவு கெட ஏத்தும் இதுவே செய்யத்தக்க
காரியம்.
(9)
276
கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன்
தன்னைத்
திருமணி வண்ணனைச்
செங்கண்
மாலினைத் தேவ
பிரானை
ஒருமை மனத்தினுள்
வைத்து
உள்ளம் குழைந்துஎழுந்து
ஆடிப்
பெருமையும் நாணும்
தவிர்ந்து
பிதற்றுமின்
பேதைமை தீர்ந்தே.
பொ-ரை :
கருமங்களும்
கருமங்களால் அடையப்படும் பலன்களுமாகி அவற்றிற்குக் காரணமுமாய் இருக்கின்றவனை, அழகிய நீலமணி
போன்ற நிறத்தை உடையவனை, செங்கண் மாலினை, தேவர்களுக்கு உபகாரகனை ஒன்றுபட்ட மனத்திலே வைத்து
மனம் குழைந்து எழுந்து ஆடி, பெருமையும் நாணமும் தவிர்ந்து, அறிவின்மையும் நீங்கி அடைவு கெடப்
பாடுமின்.
வி-கு :
‘வைத்து குழைந்து
எழுந்து ஆடி தவிர்ந்து, தீர்ந்து பிதற்றுமின்,’ என்க. ‘பேதைமை தீர்ந்து பிதற்றுமின்,’ என மாறுக.
ஈடு :
பத்தாம் பாட்டு. மேலே
கேவலரை நிந்தித்தார்; இப்பாசுரத்தில், ‘வேறு பிரயோஜனங்களைக் கருதாதவராய் அவன் குணங்களை
அநுசந்தித்து உரையும் செயலும் வேறுபட்டவர் ஆகுங்கோள்; உங்கட்கு இதுவே புருஷார்த்தம்,’ என்கிறார்.
|