|
229
229
வாழ்த்துவார் பலராக;
நின்னுள்ளே
நான்முகனை
‘மூழ்த்தநீர் உலகுஎல்லாம்
படை’என்று முதல்படைத்தாய்;
கேழ்த்தசீர் அரன்முதலாக்
கிளர்தெய்வ
மாய்க்கிளர்ந்து
சூழ்த்துஅமரர் துதித்தால்உன்
தொல்புகழ்மா
சூணாதே?
பொ-ரை :
வாழ்த்துகின்றவர்
பலர் ஆயிடுக; அதனால் வந்தது என்? தண்ணீராற்சூழப்பட்ட உலகங்களையெல்லாம் உண்டாக்குவாய் என்று
பிரமனை நின்னுள்ளே முதலில் உண்டாக்கினாய்; ஒளி மிக்க சிறப்பினையுடைய சிவபிரான் முதலாக
விளங்குகின்ற தேவர் அனைவரும் கூடி ஒளி மிக்கவர்களாகி மனவெழுச்சியோடு சூழ்ந்துகொண்டு துதித்தால்,
உனது பழமையான நற்குணம் மாசு ஏறாதோ? ‘மாசு ஏறும்’ என்றபடி.
வி-கு :
மூழ்த்த - சூழ்ந்த. கேழ் - ஒளி. தெய்வமாய் -ஒளியுடையவர்களாகி. ‘கேழ்த்த சீர் அரன்
முதலா அமரர் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்ந்து துதித்தால்’ எனக் கூட்டுக. சூழ்த்து - சூழ்ந்து
: வலித்தல் விகாரம்.
ஈடு : ஏழாம்
பாட்டு. 1’வேதங்கள் கிடக்க; வைதிக புருஷர் என்று சிலர் உளரே? அவர்கள் நம்மை
ஏத்தக் குறை என்?’ என்ன, ‘அதுவும் உனக்கு நிறக்கேடு,’ என்கிறார்.
வாழ்த்துவார்
பலராக - வாழ்த்துவார் பலர் ஆயிடுக; ‘ஆனால் தான் வந்தது என்? வேதங்களில் அவர்கள் செய்த
ஏற்றம் என்?’ என்று 2பட்டர் அருளிச்செய்வர். நின்னுள்ளே
____________________________________________________
1. பட்டர் நிர்வாகத்தைப்
பின் பற்றி அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீர் உலகெல்லாம் படை என்று முதல்
படைத்தாய்; அதனால், வாழ்த்துவார் பலரும் உண்டாயிடுக;
ஆனால் தான்
வந்தது என்? அவர்களாலேதாம் ஏத்தப் போமோ? வேதங்களைக் காட்டில்
இவர்கள் செய்த
ஏற்றம் என்?’ என்பது பட்டருடைய திருவுள்ளம். ‘வைதிக
புருஷர்கள்’ என்றது, வியாசர் முதலியோரை.
|