முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
191

என

என்று அவன்தனக்கே நலத்தை அருளிச்செய்தாற்போன்று, இவரும் மேல் திருவாய்மொழியில் அவர்களை நிந்தித்து வைத்து, இரங்கி இத்திருவாய்மொழியில் நலத்தை அருளிச்செய்கிறார்.

    ‘இவர்கள் தாம் வழி தப்பிப் போய்க் கேட்டினை அடைதற்குரிய காரணம் யாதோ, சம்பந்தம் ஒத்திருக்க?’ என்று பார்த்தார்; பகவானுடைய பரத்துவ ஞானம் இல்லாமையும் அவனுடைய சௌலப்ய ஞானம் இல்லாமையுமாயிருந்தது. அதாவது, ‘ஈசுவரனாகிறான் பெரியான் ஒருவனன்றோ? அவன், 1விசைக்கெர்ம்பு; நமக்கு அவனை எட்டப்போகாதொன்றாய் இருந்தது’ என்று சமுசாரிகள் கைவாங்க, ‘அவனுடைய சௌலப்யத்தை விரித்துப் பேசுவோம்,’ என்று பார்த்து, ‘நீங்கள் அவன் அரியவன் என்று கைவாங்க வேண்டா; அவன் அடைவதற்குச் சுலபன்; அவனை அடையுங்கோள்,’ என்கிறார். ‘ஆயின், மேல் ‘பத்துடையடியவர்’ தொடங்கிச் சௌலப்யமேயன்றோ சொல்லிக்கொண்டு போந்தது? இப்போதாகச் சௌலப்யம் சொல்ல வேண்டுகிறது என்?’ என்னில், அங்குச் சொன்ன சௌலப்யந்தான் பரத்துவம் என்னும்படி அர்ச்சாவதாரம் எல்லையான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை அருளிச்செய்கிறார்.

    2‘அர்ச்ய - சமுசாரிகளுக்கும் அர்ச்சிக்கலாம்படி வணங்கத் தக்கவனாய் இருக்கும். ‘சமுசாரிகளாகில் அர்ச்சிக்கிறார்கள்; அவர்கள் குற்றமே அன்றோ பண்ணுவது?’ என்னில், ஸர்வ ஸஹிஷ்ணு: - அவற்றையடையப் பொறுத்துக்கொண்டு நிற்கும். ‘ஆனாலும், நினைவு இரண்டாய் இராநின்றதே!’ என்னில், அர்ச்சக பராதீந அகிலாத்ம ஸ்திதி : - ‘நமக்கு ஒரு நினைவும் அவர்களுக்கு ஒரு நினைவுமாகில் அன்றோ சேராச் சேர்த்தியாவது?’ என்று அவர்களுக்கு ஈடாகத் தன்னை அமைத்து நிற்கும்,’ என்றார் பட்டர். 3‘தமர் உகந்தது எவ்வுருவம்? அவ்வுருவந் தானே; தமருகந்தது எப்பேர்?மற் றப்பேர் - தமருகந்து, எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே? அவ்வண்ணம் ஆழியா னாம்,’ என்றார் பொய்கையார். 4‘எவர் சிலர் அதிகாரிகள் யாதொருபடியாக

____________________________________________________ 

1. விசைக் கொம்பு - பிடித்து விட்ட கொம்பு.

2. அர்ச்சாவதார சௌலப்யத்துக்குப் பிரமாணங்கள் பல காட்டுகிறார் ‘அர்ச்ய’
  என்று தொடங்கி. இது, ஸ்ரீரங்கராஜஸ்தவம்,

3. முதல் திருவந்தாதி, 44.

4. ஸ்ரீ கீதை, 4 : 11.