|
அன
அன்றும் இவன் கையையே
பார்த்திருக்கக் கூடியவனாய், இவன் தான் பசித்த போது உண்ணும் பொருளை ‘அமுது செய்ய வேண்டும்’
என்று விரும்பினால், அப்போதே அமுது செய்யக்கூடியவனாய், ஆசனம் படுக்கை அணிகள் முதலியனவெல்லாம்
இவன் இட்ட வழக்காக்கி, திருமகள் கேள்வனாய், அடையப்பட்ட எல்லா விருப்பத்தையுமுடையவனான
இறைவன் அடியார்கட்கு வசப்பட்டவனாய், இவன் யாதேனும் ஒரு பொருளை இட்டால் அதனைத் திருவாய்ப்பாடியில்
யசோதை முதலானோர் வெண்ணெயைப் போன்று விரும்பக்கூடியவனாய், இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு
நிற்கிற இடமே அன்றோ அர்ச்சாவதாரமாவது?
1பரத்துவமே
தொடங்கி அவதாரங்களிலே வர அவன் குணங்களைச் சொல்லிக்கொண்டு போந்து அர்ச்சாவதாரத்தின்
எல்லை நிலமான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை உபதேசிக்கிறார். ‘ஆயின், இப்போது உபதேசிக்கப்புகுகிறது
சௌலப்யமேயாகில், பரத்துவமே தொடங்கி உபதேசிக்க வேண்டுவான் என்?’ என்னில், ‘மேன்மையுடையவன்
தாழாநின்றான்’ என்றால் அன்றோ குணமாவது? தாழ்ந்த நிலையினனான ஒருவன் தாழாநின்றால் சொரூபமாமித்தனையே
அன்றோ? இப்படித் தாழ நிற்கிறவன் மேன்மையையுடையவன் என்கைக்காகச் சொல்லுகிறது. 2உபாயங்களில்
பிரபத்திமார்க்கம் போன்றது, சௌலப்யங்களில் அர்ச்சாவதார சௌலப்யம். ‘தான் உகந்த
பொருளைத் திருமேனியாகக் கொண்டு சந்நிதி பண்ணுவானேயாயின், கௌரவபுத்தி உண்டாகுமோ?’ எனின்,
தாய்க்கும் பெண்களுக்குரிய தன்மை ஒத்திருந்தும் பண்ணுகிற உபகாரங்களைக் காண்கையாலும் 3சாஸ்திரம்
சொல்லுகையாலுமன்றோ கௌரவிக்கிறது? அப்படியே,
____________________________________________________
1. பரத்துவமே தொடங்கி’
என்றது முதல் இத்திருவாய்மொழியில்
அருளிச்செய்யுமதனைச் சுருக்கி அருளிச்செய்கிறார்.
2. உபாயங்களாவன:
கர்ம யோகம், ஞான யோகம், பத்தி யோகம், பிரபத்தி
யோகம் என்பனவாம்.
3. ‘சாஸ்திரம்
சொல்லுகையாலும்’ என்றது, ‘தந்தையைக்காட்டிலும் தாய்
சிறந்தவள்,’ என்றும், ‘தாய் கடவுளைப்
போன்று வணங்கத்தக்கவள்’ என்றும்
சொல்லுகையாலே என்றபடி.
‘தீயள் என்றுநீ துறந்தஎன்
தெய்வமும்
மகனும்
தாயும் தந்தையும்
ஆம்வரம் தருகெனத் தாழ்ந்தான்.’
இது, ஸ்ரீராமபிரான் தசரதசக்கரவர்த்தியை
நோக்கிக் கூறியது.
|