|
ப
பிரமாணத்தை நம்புகிறவனுக்கு
அடையத்தக்க இடம் அர்ச்சாவதாரம் ஒழிய இல்லை என்று இவ்வளவான சௌலப்யத்தின் எல்லை நிலத்தை
உபதேசிக்கிறார் ஆதலின், கௌரவபுத்தி உண்டாகும்.
278
செய்ய தாமரைக்
கண்ண னாய்உலகு
ஏழும் உண்ட
அவன்கண்டீர்
வய்யம் வானம் மனிசர்
தெய்வம்
மற்றுமற் றும்மற்றும்
முற்றுமாய்
செய்ய சூழ்சுடர்
ஞான மாய்வெளிப்
பட்டுஇ வைபடத்
தான்பினும்
மொய்கொள் சோதியோடு
ஆயி னான்ஒரு
மூவர் ஆகிய
மூர்த்தியே.
பொ-ரை :
ஒப்பற்ற
மூவராகிய மூர்த்தியாய், செந்தாமரைக் கண்ணனாய், உலகேழும் உண்டவனாய் உள்ள அவன்தான் பூமியும்
தெய்வலோகங்களும் மனிதர்களும் தேவர்களும் விலங்குகளும் தாவரங்களும் மற்றும் எல்லாப்
பொருள்களும் உண்டாகும்படி, எல்லாவற்றையும் சூழ்ந்துள்ள சுடரையுடைய சிறந்த சங்கல்ப ரூப ஞானத்தையுடையவனாய்த்
தோன்றி இவற்றைப் படைத்தான்; அதற்கு மேலும், செறிந்த ஒளியுருவமான பரம பதத்தோடு கூடியிருக்கின்றவனும்
ஆயினான்.
வி-கு :
கண்டீர் - முன்னிலையசைச்சொல். ‘முற்றுமாய்’ என்பதில், ஆய் என்பது, செயவெனெச்சத் திரிபு.
மூர்த்தத்தையுடையவன் மூர்த்தி; மூர்த்தம் - திருமேனி.
இத்திருவாய்மொழி
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
ஈடு : முதற்பாட்டில்,
1‘உலக காரணனாதல் தாமரைக் கண்ணனாதல் முதலிய குணங்களையுடையவன் பற்றத்தக்கவன்;
அவனைப் பற்றுமின்,’ என்கிறார். அன்றியே, ‘உலகத்திற்குக்
____________________________________________________
1. இப்பாசுரத்திற்கு
இரண்டு வகையில் அவதாரிகை அருளிச்செய்கிறார்: முதல்
அவதாரிகைக்குப் ‘பரவுமின்’ என்னும் பயனிலையைக்
கொணர்ந்து முடிக்க.
இரண்டாவது அவதாரிகைக்கு ‘ஒரு மூவராகிய மூர்த்தி, செய்ய
தாமரைக்கண்ணனாய்
உலகேழும் உண்ட அவன் கண்டீர்,’ எனக் கூட்டி
முடிக்க.
|