|
ந
நான்முகனை மூழ்த்த நீர்
உலகெல்லாம் படை என்று முதல் படைத்தாய் - உன்னுடைய சங்கற்பத்தின் ஆயிரத்தில் ஒரு கூற்றிலே
பிரமனை, ‘கடல்சூழ்ந்த பூமியையெல்லாம் உண்டாக்கு,’ என்று முதல் படைத்தாய்; ஆதலால், உன்னாலே
படைக்கப்பட்டவனான பிரமனாலே படைக்கப்பட்டவர்கள் உன்னை ஏத்த என்று ஒரு பொருளுண்டோ?’ என்றபடி.
இனி, ‘வாழ்த்துவார் பலராக’ என்பதற்கு, 1’வாழ்த்துகின்றவர் பலர் உண்டாகைக்காக’
என்றும், ‘மூழ்த்த நீர் உலகெல்லாம் படை என்று முதல் படைத்தாய்’ என்பதற்குப் ‘பிரளய வெள்ளத்திலே
உலகங்களை உண்டாக்கு’ என்று பிரமனை உண்டாக்கினாய் என்றும் பொருள் கூறுவாரும் உளர். மூழ்த்த
நீர் - ஏகார்ணவம்.
‘ஆயின், இவர்களையொழிய
ஞானத்தில் மேம்பட்டவர்களான சிவபிரான் முதலானவர்களையும் கூட்டிக்கொண்டாலோ?’ என்ன,
‘அவர்களுக்கும் நிலமன்று’ என்கிறார் மேல்: அதாவது, 2’இப்பங்களத்தை விட்டுக்
கால் கடியரானவர்கள் ஏத்தப் புக்கால்தான் எல்லை காணப் போமோ?’ என்கிறார் என்றபடி. கேழ்த்த
சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல்
புகழ் மாசு உணாதே - கிளர்ந்த ஞான முதலான குணங்களையுடையனான சிவபிரான் தொடக்கமாக, சர்வேசுவரனோடு
மசக்குப்பரலிடலாம்படி கிளர்ந்த தேவதைகள், முசு வால் எடுத்தாற்போன்று கிளர்ந்து 3ஒருவர்
சொன்னவிடம் ஒருவர் சொல்லாமல் ஒரோ பிரயோஜகங்களிலே மிகைத்த ஆயுள்களை உடையராய்
இருக்கிறவர்கள் துதி செய்தால், உன்னுடைய
_____________________________________________________
1. ‘வாழ்த்துவார்
பலர் உண்டாகைக்காகப் படைத்தாய்’ என்ற இரண்டாவது
பொருளுக்குப் ‘படைத்தாயாகிலும் அது காரியகரமாயிற்றில்லை’
என்பது
கருத்து.
2. பங்களம் -
பதர்க்கூட்டம். கால் கடியர் - சத்திமான்கள். மசக்குப் பரலிடல் -
ஐயப்படுதல். முசு - கொண்டை
முசு. ‘கோலாங்கூலம்’ என்பர்
அரும்பதவுரைகாரர்.
3. ‘சூழ்த்து’ என்றதன்
பொருள், ‘ஒருவர் சொன்னவிடம் ஒருவர் சொல்லாமல்’
என்பது, சூழ்த்து - கூறிட்டு. ‘ஏக தேசத்தை
வளைத்துக் கொண்டு’ என்றபடி.
பிரயோஜகம் - காரணம், ‘அமரர்’ என்றதனை நோக்கி மிகைத்த
ஆயுள்களையுடையராய்’ என்கிறார்.
|