முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
200

New Page 1

‘தாமரைக் கண்ணரே! தேவரீருக்கு வெற்றி!’ என்று முறைகெடப் புகழுங்கோள்.

280

பரவி வானவர் ஏத்த நின்ற
    பரம னைப்பரஞ் சோதியைக்
குரவை கோத்த குழக னைமணி
    வண்ண னைக்குடக் கூத்தனை
அரவம் ஏறிஅ லைக டல்அம
    ருந்து யில்கொண்ட அண்ணலை
இரவும் நண்பக லும்வி டாதுஎன்றும்
    ஏத்து தல்மனம் வைம்மினோ.

    பொ-ரை : ‘நித்தியசூரிகள் துதித்து ஏத்தும்படி நின்ற மேலானவனை, மேலான ஒளியுருவனை, குரவைக்கூத்தை ஆடிய இளமைப் பருவமுடையவனை, நீலமணி போன்ற வடிவையுடையவனை, குடக்கூத்து ஆடியவனை, அலைகளையுடைய திருப்பாற்கடலிலே ஆதிசேஷன்மேலே ஏறிப் பொருந்திய யோகநித்திரையை மேற் கொண்ட அண்ணலை, நல்ல இரவும் நல்ல பகலும் என்றும் விடாமல் துதித்தலை மனத்தில் வைம்மின்,’ என்கிறார்.

    வி-கு : பரவுதல் - துதிக்கும் முறையில் நின்று துதியாமை; ‘பரவசப்பட்டுத் துதித்தல்’ என்றபடி. குழகு - இளமை; குழகையுடையவன் குழகன்; ‘குழகராய் இள மடந்தையர்க்கு உருகுவோர்’ என்பது வில்லி பாரதம். ‘இடவல குடவல’ என்ற பரிபாடற்பகுதியும், ‘ஆய்ச்சியரோடு குரவை கோத்தலால் அவர்க்கு இடமும் வலமும் ஆயினோய்! கூத்தாடுதற்கு எடுத்த குடத்தினையும் பகைவரைக் கொல்லுதற்கு எடுத்த அலப்படையினையுமுடையோய்!’ என்ற அதனுரையும் இப்பாசுரத்தின் இரண்டாமடியோடு ஒப்பு நோக்கத் தக்கன.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘மேற்பாசுரத்திற்கூறிய இராமாவதாரம் பரத்துவம் என்னும்படியான கிருஷ்ணாவதாரத்திலே பற்றுங்கோள்,’ என்கிறார்.

___________________________________________________ 

1. பாசுரத்தின் இரண்டாம் அடியைத் திருவுள்ளம் பற்றி அவதாரிகை
  அருளிச்செய்கிறார். ‘பரத்துவம் என்னும்படியான கிருஷ்ணாவதாரத்திலே’
  என்றது, ‘பரத்துவம் என்னும்படி அதிசுலபனான கிருஷ்ணாவதாரத்திலே’
  என்றபடி.