முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
201

பரவ

    பரவி வானவர் ஏத்த நின்ற பரமனை - முறைகேடாக நித்திய சூரிகள் ஏத்த, அத்தாலே 1சமாதிக தரித்திரனாய் நின்றவனை. அன்றியே, ‘நித்தியசூரிகள் ஏத்தினாலும் அளவிட முடியாதபடி அவ்வருகாய் நின்றவனை’ என்றுமாம். பரஞ்சோதியை - அவர்கள் ஏத்த, அதனாலே ஒளியை உடையவனாயிருக்கிறவனை; என்றது, 2‘பரமபதத்திலே இருக்கின்ற நித்தியசூரிகளும் துதி செய்துகொண்டேயிருக்கின்றார்கள்,’ என்கிறபடியே, அவர்கள் ஏத்துமது தன் பேறாக நினைத்து, அது தன் வடிவிலே தோன்ற இருக்கின்றமையைத் தெரிவித்தபடி. 3‘பரஞ்சோதி என்னும் சொல்லின் பொருளான பரம்பொருள்’ என்பது உபநிடத வாக்கியம். ‘ஆயின், இவர்கள் ஏத்துதல் எதற்காக?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தைப் பண்ணுகை அடியார்களாயுள்ள இவர்களுக்குச் சொரூபம்: ஆதலின், ஏத்துகிறார்கள். குரவை கோத்த குழகனை - நித்தியசூரிகளோடு செய்யும் செயல்களை ஆயர் பெண்களோடு கலக்கும் இடத்தில், வாசி அறக் கலக்க வல்லவனை. குழகன் - பவ்யன். மணி வண்ணனை - அவர்களை வசீகரிக்கைக்கும் மருந்திடும் பரிகரத்தை உடையவனை; ‘நீல மணி போலே சிரமத்தைப் போக்குவதாய் உள்ள விக்கிரஹத்தை உடையவன்’ என்றபடி. குடக்கூத்தனை - திருக்குரவைக்கூத்தில் சேராதவர்களும் இழக்க ஒண்ணாதபடி மன்றிலே தன்னுடைய வடிவழகினை 4முற்றூட்டாக அநுபவிப்பிக்குமவனை.

    5
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில் கொண்ட அண்ணலை - குடக்கூத்து ஆடின சிரமம் ஆறும்படிக்கு ஈடாகப்போய்த் திருப்பாற்கடலிலே சாய்ந்தருளினபடி. தன் சந்நிதானத்தாலே (அண்மை) கிளர்த்தியையுடைத்தாய் இருத்தலின், ‘அலைகடல்’
____________________________________________________ 

1. சமாதிக தரித்திரன் - ஒத்தாரும் மிக்காரும் இலையாய மாமாயன். ‘பரமன்’
  என்பதற்கு இரண்டு பொருள்: ஒன்று, ‘ஏத்துவதனாலே பரமன்’ என்பது;
  மற்றொன்று, ‘ஏத்தினாலும் அதற்கும் அப்பாற்பட்டவன்’ என்பது.

2. இருக்கு வேதம்.

3. சாந்தோக்யம்

4. முற்றூட்டு - பூர்ண அனுபவம்

5. ‘பாடிமிழ் பரப்பகத் தரவணை யசைஇய
   ஆடுகொள் நேமியாற் பரவுதும்’

  என்பது கலித்தொகை

(முல்லை. 5).