|
New Page 1
யுடையவனை அன்றோ ஏத்தச்
சொல்லுகிறது? உங்களுடைய சேர்க்கையாலே செருக்கியிருக்கிறவனை அன்றோ ஏத்தச் சொல்லுகிறது?
ஒரு கால நியதி உண்டாய் இருக்கின்றீர்களோ? ஏத்துகைக்குச் சாதனம் இல்லாதவர்களாய்த்தான்
இருக்கின்றீர்களோ? 1அதில் ஒரு அருமை உண்டாய்த்தான் இருக்கின்றீர்களோ? ஆனபின்னர்,
விஷயங்களிலே ஓடித்திரிந்த மனத்தினை மீட்டு இவ்விஷயத்திலே வைக்கப் பாருங்கோள்,’ என்கிறார்.
(3)
281
வைம்மின் நும்மனத்து
என்று யான்உரைக்
கின்ற மாயவன்
சீர்மையை
எம்ம னோர்கள்
உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும்
வானவர்
தம்மை ஆளு மவனும்
நான்முக
னும்ச டைமுடி
அண்ணலும்
செம்மை யால்அவன்
பாத பங்கயம்
சிந்தித்து
ஏத்தித் திரிவரே.
பொ-ரை : ‘உங்களுடைய
மனத்தின்கண் வைம்மின் என்று யான் உரைக்கின்ற மாயவனுடைய சிறப்பினை எம்மைப்போன்றவர்கள்
சொல்லுவது என்? அது கிடக்க, தேவர்களை ஆளுகின்ற இந்திரனும் பிரமனும் சிவனும் அன்போடு அம்மாயவனுடைய
திருவடித்தாமரைகளைத் தியானித்து ஏத்தித் திரிவார்கள்,’ என்கிறார்.
வி-கு :
‘வைம்மின்’ என்பதிலுள்ள ஐகாரம், ஒரு மாத்திரையாய் ஒலித்துக் குற்றெழுத்தாய் நின்றது.
எம்மனோர் - உளப்பாட்டுத் தன்மைப்பன்மை. ‘செம்மை’ என்பது, ஈண்டு அன்பினைக் குறித்தது.
‘சிந்தித்து ஏத்தித் திரிவர்’ என்றதனால், மனம் வாக்குக் காயங்களைக் கூறியபடி.
ஈடு : நான்காம்
பாட்டு. 2செருக்கு மிக்கவர்களான பிரமன் உருத்திரன் முதலாயினார்கட்கும் தடையின்றிக்கே
புக்குப் பற்றும்படியாக இருக்கிற சீலகுணத்தைப் பேசுகிறார்.
_____________________________________________________
1. ‘வைம்மின்’ என்றதனை நோக்கி, ‘அதில் ஓர் அருமையுண்டாய்த்தான்
இருக்கின்றீர்களோ?’ என்கிறார்.
2. பின் இரண்டு
அடிகளைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
‘நாடொறும் வானவர்தம்மை ஆளும்’ என்பதிலே
நோக்காகச் ‘செருக்கு
மிக்கவர்களான’ என்கிறார்.
|