|
கூ
கூடினவனாய்க் கொண்டு
அவனுடைய தோற்றரவு இருப்பது’ என்னுதல்; அன்றியே, 1‘பூதங்களுக்கு ஈசுவரனாய் இருந்தாலும்,
என்னுடைய நினைவினாலே அவதரிக்கிறேன்,’ என்கிறபடியே, ஐஸ்வரியம் முதலியவைகளோடே வந்து அவதரிக்கும்,’
என்னுதல்.
திரியும்
காற்றொடு - எப்பொழுதும் சஞ்சரிக்கின்ற காற்று. அகல் விசும்பு - தன்னினின்றும் பிரிந்த எல்லாப்
பொருள்கட்கும் இடம் கொடுக்கின்ற ஆகாசம். திணிந்த மண் - கடினமான தன்மையையுடைய பூமி. கிடந்த
கடல் - 2பகவானுடைய ஆணையாலே கரையேற மாட்டாமல் கிடக்கிற கடல், எரியும் தீயொடு
- மேல் நோக்கி எரியும் தன்மையுடைய நெருப்பு. இருசுடர் - பிரகாசகரான சந்திர சூரியர்கள். தெய்வம்
- தங்களை ஒழிந்தார்க்கெல்லாம் தங்களை அடைந்து விரும்பினவற்றைப் பெற வேண்டியிருக்கிற தேவசாதி.
மற்றும் - அவர்களை அடைகின்ற மனிதர்கள். மற்றும் - விலங்கு பறவை தாவரங்கள். முற்றும் ஆய்
- இப்படிச் சொல்லலாம்படி ஆயிற்று அவனுடைய தோற்றம் இருப்பது. ‘ஆய்’ என்றது, ‘இவற்றிற்கெல்லாம்
உயிராய்’ என்றபடி. இதனால், உலகமே உருவமாய் இருக்கும் தன்மை சொல்லுகிறது.
தனக்கே உரியதான
விக்கிரகத்தோடு கூடினவனாயிருக்கும் இருப்புச் சொல்லுகிறது மேல்: கரிய மேனியன் - கண்டார்க்கு,
____________________________________________________
னுடைய திருமேனியில் அடங்கி
இருக்கும் சூக்ஷ்மநிலையினைக்
குறிக்கின்றது. ‘மயில் தோகை விரித்தாற்போலே விபூதியோடு
கூடினவனாய்க்கொண்டு
அவனுடைய தோற்றரவு இருப்பது’ என்றது, ‘தன்
உடலில் சேர்ந்து சுருங்கிக் கிடக்கின்ற தோகையை
மிகப்பெரியதாகவும்
அலங்காரமுடைத்தாகவும் விரித்துக்கொண்டு விளங்குகின்ற மயிலைப்
போன்று
உலகத்தோடு கூடித் தோன்றுகின்றான் இறைவன்,’ என்றபடி.
1.
ஸ்ரீ கீதை, 4 : 6.
2.
‘நெடுங்கடல் நிற்பதும் நாயிறு காய்வதும் நிற்றலுங்கால்
ஒடுங்கி
நடப்பதும் தண்கார் பொழிவதும் ஊழிதனில்
சுடுங்கனல்
பற்றிச் சுடாதே யிருப்பதும் தும்பைபுனைந்
தடுங்கன
லாழி யரங்கேசர் தந்திரு ஆணையினே.’
என்றார்
பிள்ளைப்பெருமாளையங்கார்.
|