முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
209

அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற - 1ஒரு விக்கிரஹத்தையுடையனான அதற்கு மேலேயும் ஒன்றே அன்றோ, சீற்றத்தையும் அருளையும் ஒரே காலத்தில் உடையனானதுவும்? இரணியன் பக்கல் சீற்றமும் செல்லாநிற்கச்செய்தே, திருவருளுக்கும் பாத்திரனான ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் திருவடிகளின் கீழே வந்து புகுரலாம் படி நின்ற. இரணியன் துவேஷத்திற்கு விஷயம் ஆனாற்போலே இவன் அருளுக்கு விஷயமானான் ஆதலின், ‘சீற்றத்தோடு அருள் பெற்றவன்’ என்கிறது. இனி, ‘சீற்றத்தோடு’ என்பதனை ‘ஒரு மூர்த்தி’ என்பதற்கு 2அடையாக்கலுமாம். ‘இரணியன் பக்கல் சீற்றமும் செல்லாநிற்க, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வானுக்குக் கிட்டலாய் இருந்தபடி எங்ஙனே?’ என்று எம்பெருமானாரைச் சிலர் கேட்க, ‘சிம்ஹம் யானைமேலே சீறினாலும் குட்டிக்கு முலை உண்ணலாம்படி இருக்கும் அன்றோ?’ என்று அருளிச்செய்தார். ‘அடியாரிடத்துள்ள அன்பினாலே அவர்கள் விரோதி மேலே சீறின சீற்றமானால், பின்னை அவர்களுக்கு அணைய ஒண்ணாதபடி இருக்குமோ?’ என்று அருளிச்செய்தார் என்றபடி.

    செம் கண் மால் - இரண்டினுடையவும் காரியம். என்றது, ‘இரணியன் பக்கல் சீற்றத்தாலும் சிவந்திருக்கும்; ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் பக்கல் வாத்சல்யத்தாலும் சிவந்திருக்கும்’ என்றபடி. மால் - 3‘மஹாவிஷ்ணும்’ என்கிறபடியே, இரணியனுக்கும் கிட்டவொண்ணாதபடி பெரியனாயிருக்கும் இருப்பைச் சொல்லுதல்; ஸ்ரீ பிரஹ்லாதாழ்வானுக்குக் கிட்டலாம்படி வியாமோஹத்தை உடையவனாயிருக்கும் இருப்பைச் சொல்லுதல். நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற - 4வாசனை உருவம்

_____________________________________________________

1. ‘ஒரு விக்கிரஹத்தையுடையனான அதற்கு மேலே’ என்றது, ‘நரவடிவும்
  சிம்ஹ வடிவும் உடைத்தான விக்கிரஹத்தையுடையனான அதற்கு மேலே’
  என்றபடி.

2. அடையாக்கும் போது, ‘சீற்றமே ஒரு வடிவு கொண்டாற்போன்ற மூர்த்தி’
  என்றாயினும், ‘சீற்றத்தையுடைய மூர்த்தி’ என்றாயினும் பொருள் காண்க.

3. ‘மால்’ என்பதற்கு, இரு பொருள்: ஒன்று, சர்வாதிகன்; மற்றொன்று,
  வியாமோகத்தையுடையவன். இவ்விரண்டினையும் முறையே விரிக்கிறார்
  ‘மஹாவிஷ்ணும்’ என்று தொடங்கி.

4. இவ்விடத்தில்,
 
  ‘கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
  ஒண்டொடி கண்ணே யுள.’

  என்ற திருக்குறளின் (1101) பொருளை ஒப்பு நோக்குக.