முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
212

தனக

தனக்குமேல் ஒரு இனிய பொருள் இல்லாதபடி இனியன் ஆனவனை. 1‘சர்வகந்த: சர்வரச:’ என்று சொல்லப்படுமவன் அன்றோ? இனி, 2கன்னல் கனி என்பதற்கு ‘மாங்கனி’ என்னுமாறு போன்று, ‘கன்னல் பழுத்த பழம் காணும் இது,’ எனப் பொருள் கூறலுமாம். தொழுமின் - இதுவன்றோ நான் உங்களுக்கு இடுகிற வேப்பங்குடி நீர்? பால்குடிக்கக் கால் பிடிக்கிறேன் அன்றோ? தூய மனத்தராய் - 3‘கிட்ட அரியனோ, எளியனோ? அறிய அரியனோ, எளியனோ? இவனைப் பற்றுவோமோ, அன்றி, பிரயோஜனத்தைக் கொண்டு அகலுவோமோ?’ என்று இங்ஙனம் சந்தேகத்தால் பீடிக்கப்பட்டவராய்ப் போகாமல், இவன்தன்னையே பிரயோஜனமாகப் பற்றுங்கோள். துயரங்கள் இறையும் நில்லா - இப்படிச் சந்தேகம் கொள்ளுகைக்கு அடியான மஹாபாபங்கள் வாசனையோடே பறிந்து போம். இனி, ‘பிறப்பு இறப்புகளால் உண்டான துக்கங்கள் அடியோடே போம்,’ என்றுமாம்.

(7)

285

        துயர மேதரு துன்ப இன்ப
            வினைக ளாய்அவை அல்லனாய்
        உயர நின்றதுஓர் சோதி யாய்உலகு
            ஏழும் உண்டுஉமிழ்ந் தான்தனை
        அயர வாங்கும் நமன்த மர்க்குஅரு
            நஞ்சி னைஅச்சு தன்தனைத்
        தயர தற்கும கன்த னையன்றி
            மற்றி லேன்தஞ்ச மாகவே.

_____________________________________________________

1. உபநிடதம்

2. ‘கன்னல் கனி’ என்பதற்கு இரு பொருள்: முதற்பொருளில்
  உம்மைத்தொகை; இரண்டாவது பொருளில் வேற்றுமைத்தொகை.

3. ‘எனதாருயிர் கெழுமிய கதிர்ச்சோதியை’ என்றதிலே கருத்தாகக் ‘கிட்ட
  அரியனோ, எளியனோ?’ என்ற ஐயம் வேண்டா என்கிறார். ‘என்
  ஆவிக்கின் அமுதத்தினை’ என்றதிலே கருத்தாக, ‘அறிய அரியனோ,
  எளியனோ?’ என்ற ஐயம் வேண்டா என்கிறார். ஞானம் இருந்தால்தானே
  உணரலாம்? ‘அமரர் முனிவர் விழுங்கும் கன்னற்கனியினை’ என்றதிலே
  கருத்தாக, ‘இவனைப் பற்றுவோமோ, அன்றி, பிரயோஜனத்தைக்கொண்டு
  அகலுவோமோ!’ என்ற ஐயம் வேண்டா என்கிறார். ‘தூய்மை’ ஈண்டு, ஐயம்
  இன்மையாகிற தூய்மையைக் குறித்தது. துயரங்கள் என்பதற்கு, இரண்டு
  பொருள்.