|
பெ
பொ-ரை :
‘துன்பத்தையே தருகின்ற பாவங்களும் புண்ணியங்களுமாய், அவை அல்லாதவனுமாய், உயர்ந்து நின்றதாய்
ஒப்பற்றதாயுள்ள ஒளி உருவமான திருமேனியையுடையவனாய், ஏழு உலகங்களையும் உண்டு உமிழ்ந்தவனாய்,
மயங்கும்படியாக உயிரைக் கொள்ளுகின்ற யமபடர்க்குப் போக்குதற்கரிய விஷமாயிருப்பவனாய், தன்னை
அடைந்தவர்களை நழுவவிடாதவனாய் உள்ள சக்கரவர்த்தி திருமகனை அல்லாமல் வேறு ஒருவரைத் தஞ்சமாக
உடையேன் அல்லேன்,’ என்றவாறு.
வி-கு :
‘துன்ப வினைகளாய்,இன்ப வினைகளாய்’ என்க. ‘துயரமே தரும்’ என்பது, மேற்கூறிய இரண்டற்கும்
அடைமொழி. நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாதல் அறிக, தஞ்சம் - பற்றுக்கோடு. ‘தஞ்சமாக இலேன்’
என மாறுக.
ஈடு : எட்டாம்
பாட்டு. 1சமுசாரிகளுக்கும் ருசி பிறக்கைக்காக, ‘நான் சக்கரவர்த்தி திருமகனை அல்லது
வேறு ஒருவரை ஆபத்துக்குப் பற்றுக்கோடாகப் பற்றி இரேன்,’ என்று தம் சித்தாந்தத்தை அருளிச்செய்கிறார்.
துயரமே தரு துன்ப
இன்ப வினைகளாய் - துயரத்தையே தரக்கூடியதான புண்ணிய பாப ரூபமான கர்மங்களை ஏவுகின்றவனாய்.
துன்ப வினையோடு வாசி அற இரண்டும் துக்கத்தையே பண்ணித்தரும் என்றாயிற்று இருப்பது இவர்:
‘இப்படி இவர் இருக்கைக்கு அடி என்?’ என்னில், 2பகவானுக்கு அடிமையாய் இருக்கும் தன்மைக்கு
விரோதியாய்க்கொண்டு தடையாதல் இரண்டற்கும் ஒத்து இருத்தலால். 3‘புண்ணியத்தையும்
பாவத்தையும் நீக்கி விட்டு முற்றுவமையை அடைகிறான்,’ என்பது உபநிடத வாக்கியம். அவை
அல்லனாய் - கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய்; 4‘வேறாக ஈசுவரன் கர்ம பலன்களைப்
புசியாமல் மிகவும் பிரகா
_____________________________________________________
1. நான்காம் அடியை நோக்கி,
அவதாரிகை அருளிச்செய்கிறார். ஆறாம்
பாசுரத்தைப் போன்று, பரோபதேசம் செய்யும் இவ்விடத்திலே
தமது
சித்தாந்தத்தை அருளிச்செய்கைக்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்,
‘சமுசாரிகளுக்கும்
ருசி பிறக்கைக்காக’ என்று.
2. ‘இருள்சேர்
இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர்
புகழ்புரிந்தார் மாட்டு.’
என்ற குறளையும், ‘நல்வினையும்
பிறத்தற்கேதுவாகலான், ‘இருவினையும்
சேரா’ என்று கூறினார்’ என்ற அதன் விசேடவுரையையும் ஈண்டுக்காண்க.
3.
முண்டகோபநிடதம், 3. 1 : 3.
4.
இருக்கு வேதம்.
|