முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
214

சிக்கிறான்,’ என்பது வேதவாக்கியம். ‘மிகவும் பிரகாசிக்கிறான்’ என்றது, தான் கர்மத்துக்குக் கட்டுப்படாதவன் அன்றிக்கே, ஏவும் தன்மையால் வந்த புகரையுடையனாயிருக்கிறபடியைத் தெரிவித்தபடி. உயர நின்றது ஓர் சோதியாய் - 1‘ரஜோ மயமான இந்தப் பிரபஞ்சத்திற்கு மேலே உள்ள பரமபதத்தில் நித்திய முத்தர்களோடு எழுந்தருளியிருக்கின்ற தேவரீரை’ என்றும், ‘பிரகிருதியைக்காட்டிலும் மேலே இருக்கின்றார் பரமாத்துமா,’ என்றும் சொல்லுகிறபடியே, இங்குள்ளாராற் சென்று கிட்ட ஒண்ணாததாய் இருக்கிற பிரகிருதிக்கு மேலே இருக்கிற பரமபதத்திலே எல்லை இல்லாத ஒளி உருவமான திவ்விய விக்கிரகத்தை உடையனாய் இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது. அன்றியே, 2‘வியஷ்டியாயும் சமஷ்டியாயும் இருக்கிற எல்லா உலகங்கட்கும் மேலே இருக்கிற பரமபதம்’ என்கிறபடியே, ‘உயர்த்தியையுடைத்தாய், நித்தியமாய், இரண்டாவது இல்லாததாய், ஒளிமயமான திவ்விய தேசத்தையுடையவன்’ என்னலுமாம்.

    உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்தன்னை - இப்படி எல்லாம் நிறைந்தவனாய் இருந்தானேயாகிலும், தன் விபூதியில் ஒரு கூறான இவ்வுலகத்தைப் பிரளயங்கொண்டது என்றால், இங்கே வந்து வயிற்றிலே எடுத்து வைத்து நோக்கி, ‘இத்தனை போதும் காணப்பெறாமையாலே இவை என்படுகின்றனவோ!’ என்று உமிழ்ந்து பார்க்குமவனை; 3வழிபறிக்கும் நிலத்திற் போவார் சீரிய தனங்களை விழுங்கி பின்னை அமர்ந்த நிலத்திலே புக்கால் புறப்பட விட்டுப் பார்க்குமாறு போலே. அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை - தன் திருவடிகளைப் பற்றினாரை அறிவு கலங்கும்படிக்கு ஈடாக உயிரைப் பிரிக்கக் கூடியவர்களாயிருந்துள்ள யமபடர்க்குக் 4காற்றவொண்ணாத நஞ்சாக உள்ளவனை; 5‘உயிர்கொண்டு

_____________________________________________________

1. யஜீர் வேதம், 2. 2 : 12.

2. சாந்தோக்யம். வியஷ்டி - வேறு வேறு. சமஷ்டி - தொகுதி.

3. ‘வழிபறிக்கும் நிலத்திற்போவார்’ என்று தொடங்கும் வாக்கியம், ‘உமிழ்ந்து
  பாரக்குமவனை’ என்பதற்குத் திருஷ்டாந்தம்.

4. காற்ற ஒண்ணாத - நீக்க ஒண்ணாத.

5. நான்முகன் திருவந். 88.