|
தன
தன்னை வாளியினால்
மாள முனிந்து அவனே, பின்னோர் தூது ஆதிமன்னர்க்காகிப் பெருநிலத்தார், இன்னார்
தூதன் என்ன நின்றான் எவ்வுட் கிடந்தானே,’ என்பது மங்கை மன்னன் மறைமொழி; பாரதந்திரிய
ரசம் அனுபவிக்கைக்காகப் போந்த பின் அதில் ஒன்று குறைந்தது என்று ஏன் இருக்க வேண்டும்?’
1'எம்பெருமானார் திருவாராதனம் பண்ணிப் போருவது வெண்ணெய்க்காடும் பிள்ளையாய் இருக்கும்.
இங்ஙனமிருக்கவும், ஒரு நாள் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் சக்கரவர்த்தி திருமகனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு
வந்து கொடுத்தாராய் அவரைப் பார்த்து, இந்த ‘என் ஒருவனையே சரணமாகப் பற்று’ என்று தேவையிடாதார்
எழுந்தருளினார்,’ என்றாராம்.
2ஆபிமுக்யத்தாலே
பெறலாம் என்றால், அவ்வாபிமுக்கியந்தானும் பரமபத்தியைப் போன்று அரிதாய் இருக்கும் அன்றோ
இம்மக்களைப் பார்த்தால்? ‘இத்தலையில் ஆபிமுக்கியத்திற்கு மேற்பட வேண்டா,’ என்று
சொல்லுகிறவை எல்லாம், பற்றப்படுகின்ற சர்வேசுவரனுடைய நீர்மையைப் பற்றச் சொல்லுகிறது;
இவனுக்கு வேண்டுவன சொல்லப்புக்கால் ‘மஹாவிஸ்வாச பூர்வகம் - மஹாவிசுவாசம் முன்னாக’ என்ன வேண்டும்படியாய்
இருக்கும். 3‘ஒரு சிறாயை நம்பி ஆறுமாதங்கட்கு வேண்டும் சோறும் தண்ணீரும் ஏற்றிக்கொண்டு
கடலிலே இழியாநின்றான்; அதைப் போன்ற நம்பிக்கையாகிலும் வேண்டாவோ பகவத் விஷயத்தைப்
பற்றுகிறவர்களுக்கு?’ என்று அருளிச்செய்தார்.
(8)
____________________________________________________
1. வேறு அவதாரங்களில்
ஈடுபாடுடையவரும் ஸ்ரீராமாவதாரத்தில்
ஈடுபாடுடையராயிருப்பர்,’ என்பதற்கு ஐதிஹ்யம்
‘எம்பெருமானார்’ என்று
தொடங்கும் வாக்கியம். வெண்ணெய்க்காடும் பிள்ளை - ஸ்ரீ கிருஷ்ணன்.
தேவையிடாதார்
- விதிக்காதவர்; ஸ்ரீராமபிரான். விதித்தவன் - ஸ்ரீ
கண்ணபிரான்.
2. ஆபிமுக்யம் -
எதிர்முகமாயிருக்கும் தன்மை; ‘அநுகூலமாயிருத்தல்’
என்றபடி. அபிமுகம் - எதிர்முகம்.
3. ‘அப்படி மஹாவிசுவாசம்
வேண்டுமோ?’ என்ன, அதனைக் கிம்புநர்
நியாயத்தாலே காட்டுகிறார் ‘ஒரு சிறாயை’ என்று தொடங்கி.
சிறாய் -
மரத்துண்டு (தெப்பம்)
|