|
தஞ
தஞ்சம் ஆகிய தந்தையோடு
தாயோடு - 1புறம்புள்ளார் ‘தாய், தமப்பன்’ என்று ஒரு பேராய், இவனுக்கு இடர் வந்தவாறே
போகட்டுப் போவர்கள்; இவனுக்கு யாதானும் ஓர் இடர் வந்தாலும், அப்போது முகங்காட்டிக்
காப்பான் இவன் ஒருவனுமே ஆயிற்று. மாதா பிதாக்கள் ‘இவன் பிறந்த முகூர்த்தம் பொல்லாதது,’
என்று நாற்சந்தியிலே வைத்துப் போவாரும், ஆபத்துக் காலத்திலே அறவிட்டு ஜீவிப்பாருமாய்
இருப்பர்கள்; அவர்களைப் போல அன்றி, தங்களை அழிய மாறியும் நோக்கும் தாயும் தந்தையுமாய்.
அன்றியே, இவர்களோடு உண்டான உறவுதான் கர்மம் அடியாக வந்தது ஆகையாலே அக்கர்மம் அழிய, அவ்வுறவும்
அழியும்; இங்கு அங்ஙன் அன்றிக்கே, 2‘சர்வேசுவரன் எல்லா ஆத்துமாக்களுக்கும் அழிவற்ற
தந்தையாய் இருக்கின்றான்,’ 3‘உலகத்தில் இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமகள்
கேள்வன் தந்தையும் தாயுமாய் இருக்கின்றான்,’ என்கிறபடியே, உள்ளனவான எல்லாப் பிராணிகளுக்கும்
தந்தையாய் இருக்கின்றவன் என்னுதல். 4அதுதன்னிலும் இழவுக்குக் கண்ணநீர் பாய
_____________________________________________________
1. ‘தந்தை தாய்’
என்னாது, ‘தஞ்சமாகிய’ என்று விசேடித்துக் கூறியதற்கு
இரண்டு வகையான கருத்து அருளிச்செய்கிறார்:
‘மாதா பிதாக்கள் தம்
நலத்தையே கருதுகின்றவர்களாகையாலே, தஞ்சமல்லர்,’ என்பது ஒன்று;
‘கர்மங்காரணமாக
வந்த சம்பந்தமுடையவர்களாகையாலே அழிந்து
போகின்றவர்கள்’ என்பது மற்றொன்று; ஆகையாலே, தஞ்சமல்லர்
என்பது. இவற்றுள், ‘தம் நலத்தையே கருதுகின்றவர்கள்’ என்பதனை
விளக்குகிறார்.
‘புறம்புள்ளார்’ என்று தொடங்கி. இடர் வந்தவாறே
போகட்டுப் போதலைக் காகாசுரனிடத்திலும்,
நாற்சந்தியிலே வைத்துப்
போதலை ஜராசந்தனிடத்திலும், அறவிட்டு ஜீவித்தலை விஸ்வாமித்திரன்
மருகன் சுநஸ்ஸேபநனிடத்திலும் கண்டுகொள்வது. அறவிட்டு - விலைக்கு
விற்று.
‘பிராதாக்கள்,
புத்திரர்கள், மாதா பிதாக்கள், பிரஹ்ம ருத்திராதிகள்,
தொடக்கமானவர்கள் ரக்ஷகராகக் குறை
என்?’ என்னில், பிராதாக்கள்
ரக்ஷகரல்லரென்னுமிடம் வாலி பக்கலிலும், இராவணன் பக்கலிலும்
காணலாம். புத்திரர்கள் ரக்ஷகரல்லரென்னுமிடம் சிவன் பக்கலிலும் கஞ்சன்
பக்கலிலும் காணலாம்;
மாதா பிதாக்கள் ரக்ஷகரல்லர் என்னுமிடம்
கைகேயிபக்கலிலும் இரணியன் பக்கலிலும் காணலாம்;
... ... ... சத்தையை
நோக்கிக்கொண்டு போருகையாலே இவனே எல்லார்க்கும் ரக்ஷகன்,’ என
வரும் பிள்ளைலோகா
சார்யர் ஸ்ரீ
சூக்திகளை ஈண்டு ஒப்பு நோக்குக.
(அஷ்டாதச ரஹஸ்யம், பிரபந்ந பரித்ராணம்.)
2. 3.
பாரதம்
4. ‘அதுதன்னிலும்
இழவுக்குக் கண்ணநீர் பாய வேண்டாத
தந்தையாயிருப்பான்’ என்றது, இறைவன் நித்தியனாதலை நோக்கி;
‘அச்சுதன்’ அலனோ?
|