முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
22

அத

அத்தகைய பிரமன் ஏத்தினாலும் தேவர்க்குத் தாழ்வாமித்தனை யன்றோ?’ என்கிறார் என்று பட்டர் அருளிச்செய்வர்.

    மாசு உண்ணாச் சுடர் உடம்பாய் - 1ஹேயப் பிரத்யநீகமாய்ச் சுத்த சத்துவமாகையாலே நிரவதிக பேரொளி உருவமான திவ்விய விக்கிரகத்தையுடையையாய். மலராது குவியாது - 2’அரும்பினை அலரை’ என்னும்படியாயிருக்கும்; அதாவது, ‘யுவாகுமார:’ என்கிறபடியே ஒரே காலத்தில் இரண்டு நிலையும் சொல்லலாயிருக்கை. இனி, ‘மலராது குவியாது’ என்பதற்கு, 3’தன் சொரூபத்திற்குத் துல்லியமான ஒரே தன்மையையுடைய திவ்விய மங்கள விக்கிரகத்தையுடையவன்’ என்கிறபடியே, 4குறைதல் வளர்தலின்றி இருக்கின்ற திருமேனியையுடையையாய்’ என்று பொருள் கூறலுமாம். மாசு உண்ணா ஞானமாய் - ஒருகாரணத்தாலே மாசு ஏறக் கூடியதல்லாத ஞானத்தையுடையையாய். ‘மலராது குவியாது’ என்பதனை இடைநிலைத் தீவகமாக இதற்கும் கூட்டுக. ஆக, ‘உலகமக்கள் கர்மங்காரணமாக மேற்கண்ட சரீரங்கட்கு வரக்கூடிய சொரூபம் வேறுபட்ட தன்மையுமில்லை இவன் திருமேனிக்கு; அவர்கள் ஞானத்துக்கு வரக்கூடியதான வேறுபாட்டுத் தன்மையுமில்லை இவனுடைய ஞானத்துக்கு,’ என்கை. முழுதுமாய் - சொல்லப்படாத மற்றைக் குணங்களை யுடையையாய். இனி, இதற்கு, ‘உலகமே உருவமாக நிற்கும் நிலை’ என்று பொருள் கூறலுமாம். முழுது இயன்றாய் - எல்லாவற்றையும் நிர்வஹித்தாய். இது, மேல் ‘வரம்பின்றி முழுதியன்றாய்’ என்றதன் 5அநுவாதம்.

    மாசு உண்ணா வான் கோலத்து அமரர்கோன் வழிப்பட்டால் மாசு உண்ணா உன பாதமலர்ச் சோதி மழுங்காதே - மறதி முதலிய காரணங்கள் இல்லாத ஞான முதலான ஆபரணங்களையுடையான்

______________________________________________________

1. ஹேயப்பிரத்யநீகன் - தள்ளத்தக்கனவற்றிற்கு எதிர்த்தட்டானவன்;
  ‘எக்குற்றங்களும் தீண்டாதவன்’ என்றபடி.

2. பெரிய திருமொழி, 7. 10 : 1.

3. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 2 : 1.

4. ‘வருந்தாத வருந்தவத்த’ என்ற பாசுரத்தின் வியாக்கியானம் காண்க. பக். 15.

5. அநுவாதம் - முன் சொல்லப்பட்டதனை வேறு ஒரு காரணமாகப் பின்னும்
  எடுத்து மொழிதல்.