முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
227

என

என்கிறபடியே, எல்லார் கண்களுக்கும் இலக்கு ஆக்கினான். அன்று - 1‘உகவாதாரும் கண்டு வாழ்ந்த நாளிலே இழந்த நான், இனிப் பெறுதல் என்று ஒன்று உண்டோ?’ என்று வெறுக்கிறார் இழவுக்கு. தேர் கடவிய பெருமான் கனை கழல் - 2‘சேநா தூளியும் உழவுகோலும் சிறுவாய்க் கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் அத்திருவடிகளிலே சார்த்தின சிறுச்சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற போதைத் திருவடிகளில் ஆபரணத்தின் ஒலி செவிப்படவும் அவ்வடிவைக் காணவும் காணும் ஆசை. கனை கழல் - ‘செறிந்த கழல்’ என்னுதல்; ‘ஒலிக்கின்ற கழல்’ என்னுதல். கண்கள் காண்பது என்று கொலோ - இக்கண்கள் 3அடிப்படுவது எப்போதோ? இவை முடியப் பட்டினி விட்டே போந்தவை இப்பட்டினி விடக்கடவது என்றோ? ‘அவ்வடிவைக் காண வேண்டும்,’ என்று விடாய்த்த கண்கள் ‘காணப் பெறுவது என்றோ?’ என்றபடி.

(10)

288

        கண்கள் காண்டற்கு அரிய னாய்க்கருத்
            துக்கு நன்றும் எளியனாய்
        மண்கொள் ஞாலத்து உயிர்க்கெ லாம்அருள்
            செய்யும் வானவர் ஈசனைப்
        பண்கொள் சோலை வழுதி வளநாடன்
            குருகைக் கோன்சட கோபன்சொல்
        பண்கொள் ஆயிரத்து இப்பத் தால்பத்த
            ராகக் கூடும் பயிலுமினே.

   
பொ-ரை : கண்களால் பார்த்தற்கு அரியவனாய், மனத்தால் பார்த்தற்கு மிகவும் எளியவனாய், மண்கொள் உலகத்திலே உள்ள உயிர்கட்கெல்லாம் திருவருள் செய்கின்ற நித்தியசூரிகள் தலைவனைப்பற்றி, வண்டுகளின் பண்கள் பொருந்தியிருக்கின்ற சோலைகளையுடைய வழுதி நாட்டையுடையவரும் குருகூர்க்குத் தலைவருமான ஸ்ரீ சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட பண்களோடு கூடின ஆயிரம் பாசுரங்களிலே இப்பத்துப் பாசுரங்களையும் படிமின்; படித்தால் பத்தராதல் கூடும்.
_____________________________________________________

1. மேலே ‘பண்டு’ என்றவர், மீளவும் ‘அன்று’ என்று கூறுவதற்கு, பாவம்
 
‘உகவாதாரும்’ என்று தொடங்கும் வாக்கியம்.

2. பக். 177 காண்க.

3. அடிப்படுவது - திருவடிகளிலே படுவது.