|
ஓர
ஓர் அமரர் கோனை உண்டாக்குவது,
அப்படியுண்டாக்கப்பட்ட அமரர்கோன்தான் உன்னைத் துதி செய்தால், ஒரு சேர்க்கையினாலே மாசு
உண்ணக்கூடியதல்லாத உன் திருவடிகளின் பேரொளியானது, ‘இவன் ஏத்தும் அளவே இத்திருவடிகள்’ என்று
மழுங்காதோ! ‘மாசூணா வான்கோலத்து அமரர்கோன்’ என்றதனால் கற்பிக்கப்பட்ட பிரமன்
என்பது போதரும். ‘எவ்வாறு?’ எனில், இப்பொழுதுள்ள பிரமனுக்குத் தனது அதிகாரத்தின் முடிவிலே
ஞானத்துக்கு மறைப்பு உண்டு; இவனுக்கு அது இல்லை என்று கூறப்படுதலின். வழிபடுதற்கு உறுப்பாகச்
சொல்லப்படுகின்ற இடமாதலின், ‘கோலம்’ என்பது ஈண்டு வழிபடுதற்கு உறுப்பான ஞானத்தைக் காட்டுகின்றது.
‘பிரமனுடைய ஆயுளை யுடையவனும் கோடிக்கணக்கான முகத்தையுடையவனும் மிகவும் சுத்தமான மனத்தையுடையவனுமான
ஒரு மனிதன் இருப்பானேயானால், அவன், உம்முடைய குணங்களில் பதினாயிரத்தில் ஒரு குதியைச்
சொல்லுவானோ, சொல்லமாட்டானோ அறிகிலோம்!’ என்பது வராஹ புராணம். ஆக, ‘அப்படிப்பட்ட
அமரர் கோன் உன்னைத் துதி செய்தால், அவனும் 1அடிக்கு அழிவு செய்தானாய் விடுமித்தனை,’
என்றபடி. ‘அவன் அடியறிந்து மங்களாசாசனம் பண்ணுவார் ஆழ்வார்களேயாவர்,’ என்றபடி. தம்முடைய சேஷத்துவத்திற்குத்
தகுதியாக, ‘உன் திருமேனி’ என்னாது ‘உனபாதம்’ என்கிறார்.
(8)
231
மழுங்காத வைந்நுதிய
சக்கரநல்
வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறுஅளிப்பான்
புள்ஊர்ந்து
தோன்றினையே!
மழுங்காத ஞானமே
படையாக மலர்உலகில்
தொழும்பாயார்க்கு
அளித்தால்உன்
சுடர்ச்சோதி
மறையாதே?
________________________________________________
1. அடிக்கு அழிவு - மூலஹாநி,
திருவடிகட்குத் தாழ்வு; சிலேடை. ‘இவனும்
அடிக்கழிவு செய்தானாய்விடும் எனின், பின்னைத் துதிப்பதற்கு
உரியார்தாம்
யார்?’ என்னும் வினாவைத் திருவுள்ளம்பற்றி அதற்கு விடையாக ‘அவன்
அடியறிந்து’
என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
|