|
த
திருமந்திரம் ஆயிற்றே;
அது மூலமாக அநுஷ்டிக்கவே, இத் திருவாய்மொழியிற் சொன்னதைச் செய்தது ஆம். 1ஆசாரத்தை
முக்கியமாகக் கொண்ட அவதாரமாய், அதில் பெருமாள் ‘பிதா சொல்லிற்றுப் புத்திரன் செய்யக்கடவன்,’
என்கிற மரியாதை குலையாதே அதனை நிலைநிறுத்துகைக்காகப் பித்ருவசன பரிபாலனம் முதலான சாமாந்ய
தருமத்தை அநுஷ்டித்தார்; 2’இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னுமிடத்தை
அநுஷ்டித்துக் காட்டினார் இளையபெருமாள்; ‘அது செய்யுமிடத்தில் அவன் உகந்த அடிமை செய்யக்கடவது,’
என்னுமிடத்தை ஸ்ரீ பரதாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்; ‘அதுதான் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும்
அடிமையை முடிவாகக் கொண்டு இருக்கும்,’ என்னுமிடத்தை ஸ்ரீ சத்ருக் நாழ்வான் அநுஷ்டித்துக்
காட்டினான்.
பெருமாள், ‘பிதா
சொல்லிற்றுச் செய்யக் கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் நேரே பிதாவைப்
பின்பற்றக் கடவன் என்னுமிடத்தை இளையபெருமாள் அநுஷ்டித்தார்; அதுதன்னிலும் ‘குருஷ்வ - செய்’
என்று நிர்ப்பந்திக்கக் கடவர்
____________________________________________________
இவ்வர்த்தத்துக்கு
- ‘பயிலும் சுடரொளி’, ‘நெடுமாற்கடிமை’ என்ற
திருவாய்மொழிகளிற் ,சொல்லுகிற பொருளுக்கு,
அடி - காரணம். ‘அது
மூலமாக அநுஷ்டிக்கவே’ என்றது, ‘திருமந்திரம் மூலமாகச் சத்ருக்நாழ்வான்
அநுஷ்டிக்கவே’ என்றபடி. ‘இத்திருவாய்மொழியிற் சொன்னதைச் செய்தது
ஆம்,’ என்றது, ஸ்ரீ சத்ருக்நாழ்வான்
அநுஷ்டிக்கைக்கு அடி
திருமந்திரமாகையாலேயும், ஆழ்வார் அருளிச்செய்ததும்
திருமந்திரார்த்தமாகையாலேயும்,
இவர் அருளிச்செய்த அர்த்தத்தை
அநுஷ்டித்தான் என்னக் குறையில்லை என்றபடி.
1. ‘கச்சதா’ என்ற
சுலோகத்திற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார்,
‘ஆசாரத்தை’ என்று தொடங்கி.
2. ‘இதுதான் செய்யத்தக்க
விஷயத்தில் செய்யக்கடவது’ என்னும் இவ்விடத்தில்,
நற்றா
தையும்நீ; தனிநா யகன்நீ; வயிற்றில்
பெற்றாயும்
நீயே; பிறரில்லை:
பிறர்க்கு நல்கக்
கற்றா
யிதுகா ணுதிஇன் றெனக்கை மறித்தான்
முற்றா மதியம்
மிலைந்தான் முனிந்தானை யன்னான்.’
என்ற அருமைச்செய்யுள் நினைவிற்கு
வருகின்றது. (கம்ப அயோத்: நகர்
நீங்கு. 136)
|