முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
234

அல

அல்லர்; ‘இராச்சியத்திலே இரும்’ என்னில், அது இன்னாதாகிலும் அதிலிருந்து அடிமை செய்யக்கடவன் என்னுமிடத்தை அநுஷ்டித்தான் ஸ்ரீ பரதாழ்வான்; அதன் எல்லையை அநுஷ்டித்தான் ஸ்ரீ சத்ருக்நாழ்வான்.

    அவன் படி சொல்லுகிறது ‘கச்சதா’ என்னும் சுலோகம். ‘மாதுல குலம் கச்சதா பரதேந நீத: - அம்மான் வீட்டிற்குச் செல்லுகிற பரதனாலே அழைத்துச் செல்லப்பட்டான்’ - மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் அவன்; அவன் தான் உத்தேஸ்யமாகப் போனான் இவன். ‘இவனும் மாமன் வீடு உத்தேஸ்யமாகப் போனான் என்ன ஒண்ணாதோ?’ எனின், யுதாஜித்து அழைத்தது ஸ்ரீபரதாழ்வானை அன்றோ? ‘கச்சதா - போகிற’ என்கிற இந்த நிகழ்காலச் சொல்லால் முன் கணத்திலும் தன்னெஞ்சிலும் இல்லை; பெருமாளுக்கு விண்ணப்பஞ்செய்தமையும் இல்லை; சக்கரவர்த்தியைக் கேள்வி கொண்டமையும் இல்லை என்கை. ‘பரதேந - பரதனால்’ - பெருமாளும் போகட்டுப் போக, இளையபெருமாளும் அவரைத் தொடர்ந்து போக, சக்கரவர்த்தியும் இறக்க, ஸ்ரீ சத்ருக்நாழ்வானும் தன்னையல்லது அறியாதே இருக்க, பெருமாளுடைய இராச்சியத்தைப் பரித்துக்கொண்டிருக்கையாலே ‘பரதன்’ என்கிறது. - 1‘பரத இதி ராஜ்யஸ்ய பரணாத் - பரதன் என்னும் இப்பெயர் ராஜ்யத்தைத் தாங்குகையாலே.’

    ‘ததா - அப்படியே’ - தானும் ராஜபுத்திரனாய் நக்ஷத்திரமும் வேறுபட்டிருந்தால், பிரிந்து தனக்குப் பொருந்தும் முகூர்த்தத்திலே செல்லுதலே முறையாம். அது செய்யாதே அவன் புறப்பட்டதே தனக்கும் முகூர்த்தமாகப் போனான். ‘அநக: - பாபம் அற்றவன்’ - அப்படை வீட்டில் அல்லாதார் எல்லாம் பாபம் கலந்த ஜீவனம் போலேகாணும். என்றது, இராம பத்தி கலந்திருத்தலைக் குறித்தபடி. ‘ஆயின், இராம பத்தியைப் பாபம் என்னலாமோ?’ எனின், ‘இருவினைகளில் புண்ணியம் உத்தேஸ்யமாயினும், மோக்ஷ உலகிற்கு விரோதி என்னும் முறையாலே இரு வினையும் விடத்தக்கது என்னாநின்றதே அன்றோ? இங்கும், உத்தேஸ்ய விரோதியாகையாலே சொல்லலாம்,’ என்பது. ‘ஆயின், இது

_____________________________________________________

1. மேலே கூறின பொருளுக்குச் சப்த நிர்வாஹம் காட்டுகிறார், ‘பரத இதி
  ராஜ்யஸ்ய பரணாத்’ என்று,