முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
235

உத

உத்தேஸ்ய விரோதியோ?’ என்னில், 1பேற்றுக்கு முடிவின் எல்லையை நோக்க, முதற்படியில் நிலை விரோதி அன்றோ? ‘சத்ருக்ந:’ - பிறந்த போதே ‘எதிரிகள் மண்ணுண்ணும்படி வளரும்’ என்று தோற்றியிருக்கையாலே, இப்படித் திருநாமம் சாற்றினான் வசிஷ்டன். ‘நித்ய சத்ருக்ந:’ 2புறம்பேயுள்ள பகைவர்களை வெல்லுதல் அன்றியே, உட்பகைவர்களான இந்திரியங்களை வென்றிருப்பவன். என்றது, 3‘பும்சாம் திருஷ்டி சித்தா பஹாரிணம் - ஆடவர்களுடைய கண்களையும் மனத்தையும் கவரக்கூடியவன்’ என்கிற விஷயத்தில் கண் வையாமையைத் தெரிவித்தபடி. அங்கும் ‘இவனுக்கு இனிது’ என்று இவ்வழியாலே புகுவானித்தனை.

    ‘‘அநக:’ என்பதற்கும், ‘நித்யசத்ருக்ந:’ என்பதற்கும் வேறுபாடு என்?’ என்னில், 4அநக: என்னும் இதனால், 5பரிசுத் 

_____________________________________________________

1. பேற்றுக்கு முடிவின் எல்லை - அவன் அடியார்கட்கு அடிமைப்பட்டிருக்கும்
  நிலை. முதற்படி - அவனுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலை.

2. இவ்விடத்தில்,

  ‘முத்துருக் கொண்டுசெம் முளரி அலர்ந்தால்
   ஒத்திருக் கும்எழி லுடையஇவ் வொளியால்
   எத்திருக் கும்கெடும் என்பதை உன்னாச்
   சத்துருக் கன்எனச் சார்த்தினன் நாமம்.’

  என்ற கம்பராமாயணச் செய்யுள் ஒப்பு நோக்குக.

3. ஸ்ரீராமா. அயோத்.

 
‘ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்!
   தாடகை என்பதச் சழக்கி நாமமே.’

  என்பர் கம்ப நாட்டாழ்வார்.

     
‘அங்கும்’ என்றது, ஸ்ரீராமபிரானை. ‘இவனுக்கு இனிது’ என்றது, ‘ஸ்ரீ
  பரதாழ்வானுக்கு இனியவர் என்னும் முறையாலே’ என்றபடி.

4. இவ்விடம் படிக்குந்தோறும் மேன்மேலும் இன்பத்தை ஊட்டுவது. இத்தகைய
  நூல்களையும் இத்தகைய பெரியார்களையும் நோக்கியே,

  ‘நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
  புண்புடை யாளர் தொடர்பு.’

  என்ற திருக்குறள் எழுந்தது போலும்!

5. ‘தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
   தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப்
   போயினை என்ற போது புகழினோய்! தன்மை கண்டால்
   ஆயிரம் இராமர் நின்கே ழாவரோ தெரியி னம்மா!’

  என்றார் ஸ்ரீ குகப்பெருமாள்.