முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
236

தத

தத்தில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது; ‘நித்ய சத்ருக்ந:’ என்னுமிதனால், 1இனிமையில் ஸ்ரீ பரதாழ்வானை ஒவ்வார் பெருமாள் என்கிறது. ‘நீத: - அழைத்துச் செல்லப்பட்டான்’ - ஒரு குற்றுடைவாள், நிழல் உள்ளிட்டவையைப் போன்று போனான். என்றது, ‘ஒருவனோடு மற்றொருவன் சேர்ந்து செல்லுகின்ற காலத்துச் செல்லுதலாகிய அத்தொழில் செல்லுகின்ற இருவர் இடத்திலும் இருக்குமே? தான் வேறு ஒருவனாக இருந்தும், ஜாதி குணங்களைப் போன்று பரதந்திரனாய்ப் போனான்,’ என்றபடி.

    ‘பிரீதி புரஸ்க்ருத: - தமையன் பின்னே தம்பி போகக் கடவன்’ என்னும் முறையாலே தேவை போன்று இருக்குமோ?’ என்னில், அங்ஙன் அன்று; ‘படைவீட்டிலே இருந்தால் ஒருவன் சோற்றைப் பகுந்து உண்ணுமாறு போன்று படை வீடாகப் பெருமாளுக்கு அடிமை செய்வார்கள்; ஏகாந்தமான இடத்தில் நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்,’ என்று, 2‘அஹம் சர்வம் கரிஷ்யாமி - நான் எல்லா அடிமைகளையும் செய்வேன்’ என்று இளைய பெருமாள் காடேறப் போயினமை போன்று, இவனும் ‘நாம் எல்லா அடிமைகளையும் செய்யலாம்’ என்கிற பிரீதி பிடரி தள்ளத்தள்ளப் போனான்.

    3
எம்பெருமானார் இச்சுலோகத்துக்கு வாக்கியார்த்தமாக, ‘ஸ்ரீசத்ருக்நாழ்வான் பெருமாளுக்கு நல்லனானபடி, பெருமாளைக் காற்கடை கொண்டு, பெருமாளுக்கு நல்லனான ஸ்ரீ பரதாழ்வானையல்லது அறியாதபடியானான்’ என்று அருளிச்செய்தார். இது காரணமான பின்பு, சொன்ன 4மிகை எல்லாம் பொறுக்கும் அன்றோ? அல்லது, ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன்

____________________________________________________ 

1. ‘எண்ணில் கோடி இராமர்க ளென்னிலும்
  அண்ணல் நின்னரு ளுக்குஅரு காவரோ?
  புண்ணி யம்எனும் நின்னுயிர் போயினால்
  மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?’

  என்றார் கௌசல்யா தேவியார்.

2. ஸ்ரீ ராமா. அயோத். 31 : 25.

3. ‘இப்படிப் பரதாழ்வானையே பற்றியிருந்தால், பெருமாளுடைய பிரீதிக்கு
  விஷயமானபடி என்?’ எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘எம்பெருமானார்’ என்று தொடங்கி.

4. மிகை - ஏற்றம்.