முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
237

உத

உத்தேஸ்யன் ஆகையாவது, ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாம் அன்றோ? 1‘அநந்யா - இறைவனைத் தவிர வேறொன்றனையும் விரும்பாத’ என்கிற நிலை இவர்களுக்கு உண்டானால் இவர்களைப் பின்பற்றுகிறது அவனைப் பற்றியதாம் அன்றோ?

    2
பிராஹ்மண சாதி ஒன்றாய் இருக்கவும், குலம் சரணம் கோத்திரம் முதலியவைகளால் பிரித்துச் சம்பந்திக்குமாறு போன்று, வைஷ்ணவர்களுக்கு நிரூபகம், அவனுடைய குணங்கள் செயல்கள் முதலியவைகளால் ஆம். அவ்வழியாலே, அவனுடைய வடிவழகிலே துவக்குண்டிருக்குமவர்கள், குணங்களிலே துவக்குண்டிருக்குமவர்கள், செயல்களிலே துவக்குண்டிருக்குமவர்கள் என்று இவ்வழியாலே அவர்களைப் பிரித்து, அவர்கள் எல்லாரோடும் தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு, ‘அவர்கள் எல்லாரும் எனக்கு ஸ்வாமிகள்’ என்கிறார்.

289

        பயிலும் சுடரொளி மூர்த்தியைப்
            பங்கயக் கண்ணனைப்
        பயில இனியநம் பாற்கடற்
            சேர்ந்த பரமனைப்
        பயிலும் திருவுடை யார்எவ
            ரேலும் அவர்கண்டீர்
        பயிலும் பிறப்பிடை தோறுஎம்மை
            ஆளும் பரமரே.

_____________________________________________________

1. ‘ஆயின், பகவானையே பற்ற ஒண்ணாதோ?’ எனின், ‘அநந்யா’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘அநந்யா’ என்று தொடங்கும்
  சுலோகம், ஸ்ரீ கீதை 9 : 22.

2. ‘இத்திருவாய்மொழியில் பாகவதர்களை அனுபவிக்க இழிந்தவர்,
   பாசுரந்தோறும் முன்னடிகளில் பகவானுடைய குணங்களையும்
   செயல்களையும் அருளிச்செய்வான் என்?’ எனின், அதற்கு விடை
   அருளிச்செய்கிறார், ‘பிராஹ்மண சாதி’ என்று தொடங்கி.

 
    ‘விப்பிரர்க்குக் கோத்திர சூத்திர சரண கூடஸ்தர் பராசர பாராசர்ய
  போதாயநாதிகள்,’ என்பர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
  (ஆசார்ய ஹ்ருதயம், பிரதமப் பிரகரணம், 36.)

 
‘கோத்திர சூத்திரங் குடியு ரைத்துளார்
   வேத்திர கீயமா நகரின் மேயினார்.’

  என்பது, வில்லி பாரதம்.