|
அ
அடைமொழியாக்கி, என்றும்
உளதாந் தன்மையைச் சொல்லிற்றாகக் கோடலுமாம். என்றும் உளதாவதாவது, எல்லாக்காலத்திலும்
இருப்பது ஒன்று ஆகையாலே, ‘பயிலும்’ என நிகழ் காலத்தால் அருளிச்செய்கின்றார்.
1ஆக, ‘சுத்த சத்துவமயமாய்ச் சொரூபப் பிரகாசகமான விக்கிரகத்தையுடையவன்’ என்கை.
2நிஷ்கிருஷ்ட
சத்துவமேயாய் 3‘அந்த முக்குணங்களுக்குள்ளே பரிசுத்தமாயிருப்பதனாலே ஸ்படிகம்
போன்று பிரகாசிக்கிறதும் சாந்தமாயிருப்பதுமான சத்துவகுணம்’ என்றும், 4‘கிளர்ச்சியோடு
இருக்கிற ஒளிகளினுடைய கூட்டமாய் இருக்கிற அந்த விஷ்ணு’ என்றும், 5‘ஆகாயத்தில்
அநேகம் ஆயிரம் சூரியர்களுடைய ஒளியானது ஒரே காலத்தில் உண்டானால் அது அம்மகாத்துமாவினுடைய ஒளிக்கு
ஒப்பாகும்’ என்றும் சொல்லுகிறபடியே, எல்லை இல்லாத ஒளி உருவமாய் ‘ஆறு குணங்களுடைய விக்கிரஹம்’
என்று மயங்குவார்க்கு மயங்கலாம்படியாய், ஞானம் முதலான குணங்களுக்கும் சொரூபத்துக்கும் பிரகாசகமான
விக்கிரகம் என்பதனைத் தெரிவித்தபடி.
பங்கயக்கண்ணனை
- 6வடிவழகு எல்லாம் பாதியும், கண்ணழகு பாதியுமாயிருக்கும். 7‘ராம:
கமல பத்ராக்ஷ:’ என்னு
____________________________________________________
1. முற்கூறிய
‘எல்லை இல்லாத ஒளிப்பிழம்பையே வடிவாகவுடையவன்’ என்ற
பொருளால் கிடைத்த அர்த்தத்தை
அருளிச்செய்கிறார், ‘ஆக, சுத்த சத்துவ
மயமாய்’ என்று தொடங்கி.
2. சத்வம் பிரகாசகம்’
என்னுமதற்குப் பிரமாணமும், ‘விக்கிரஹம் நிரவதிக
தேஜோ ரூபம்’ என்னுமதற்குப் பிரமாணமும் காட்டுகிறார்,
‘நிஷ்கிருஷ்ட
சத்வமேயாய்’ என்று தொடங்கி. நிஷ்கிருஷ்டசத்வம் - அறுதி செய்யப்பட்ட
சத்துவம்.
3.
ஸ்ரீ கீதை, 14 : 6.
இது, சத்துவகுணம்
பிரகாசத்தோடு கூடியது என்பதற்குப்
பிரமாணம்.
4.
ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 :
63.
5.
ஸ்ரீ கீதை, 11 : 12.
இவை
இரண்டும் விக்கிரஹம் எல்லை இல்லாத
தேஜோரூபமாயிருக்கும் என்பதற்குப் பிரமாணங்கள்.
6. வடிவழகைச்
சொன்ன பின்னர், ‘பங்கயக் கண்ணனை’ என்று ஓர் உறுப்பை
மாத்திரம் அருளிச்செய்வதற்கு பாவம்,
‘வடிவழகெல்லாம்’ என்று
தொடங்கும் வாக்கியம்.
7. ‘பயிலும்
சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை’ எனச் சேர
அருளிச்செய்ததற்குப் பிரமாணம், ‘ராம:
கமல பத்ராக்ஷ:’ என்பது. ‘பயிலும்
சுடரொளி மூர்த்தி’ என்றதனால், ‘ராம:’ என்றதன்
பொருளையும், ‘பங்கயக்
கண்ணனை’ என்றதனால் ‘கமல பத்ராக்ஷ:’ என்றதன் பொருளையும்
அருளிச்செய்தார்
என்றபடி. இது,
ஸ்ரீராமா. சுந். 53. 3.
பிராட்டியைப்
பார்த்துத்
திருவடி கூறும் வார்த்தை.
|