|
என
என்றது, ‘அடியவர்கட்காக’
என்றபடி. என்றது, ‘அல்லாதார் வடிவு படைத்தால், ‘வடிவில் வீறுடையோம்’ என்று, அணைய
விரும்பினால், அருமைப்படுத்திப் புறப்படத் தள்ளுவர்கள்; இப்படி அழகுடையவன், தானே அடியார்களை
அனுபவிப்பிக்கைக்காக அணித்தாக வந்து சாய்ந்தமையைத் தெரிவித்தபடி. ‘வடிவழகாலும் குணங்களாலும்
அல்லாதாரைக் கழித்து, இவனுக்கு ஓர் ஏற்றம் சொன்னீர்; மேன்மைக்கு இவனுக்கு அவ்வருகே ஒரு
பொருள்தான் உண்டோ?’ என்னில், ‘மேன்மைக்கும் இவனுக்கு அவ்வருகு ஒரு பொருள் இல்லை,’ என்பார்,
‘பரமனை’ என்கிறார்.
பயிலும் திருவுடையார்
- ‘நல்ல வாய்ப்பாய் இருந்தது’ என்று முகம் காட்டுவித்துக்கொண்டு பிரயோஜனத்திற்கு 1மடியேற்கையன்றியே,
அவன்தன்னையே பிரயோஜனமாகப்பற்றி நெருங்கும் செல்வமுடையார். என்றது, ஒரு பிரயோஜனத்துக்குப்
பற்றினவர்கள் அது பெற்றவாறே அவனை விட்டுப் போவர்கள் அன்றோ? அவன்தன்னையே பற்றினவர்கள்
பின்னை அங்கே நெருங்குமத்தனையேயாதலின், ‘பயிலும்’ என நிகழ்காலத்தால் அருளிச்செய்கிறார்
என்றபடி. அவன் இறைமைத்தன்மைக்கு எல்லையாய் முடி கவித்தாற்போலே, இவர்கள் அடிமைக்கு எல்லையாய்
முடி கவித்திருப்பவர்களாதலின், ‘திருவுடையார்’ என்கிறார்.
‘ஆயின், இதனைத்
திருவாகச் சொல்லலாமோ?’ எனின், 2‘அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான் - ஆகாயத்தை அடைந்தவன்
ஸ்ரீமானாக உள்ளவன்’, 3‘ஸது நாகவரஸ் ஸ்ரீமான் - அந்தக் கஜேந்திர ஆழ்வான் ஸ்ரீமானாய்
இருந்தான்,’ 4‘லக்ஷ்மணோ லக்ஷ்மி சம்பந்ந:’ என்னும் இடங்களில் இதனைத் திருவாகக்
கூறப்பட்டுள்ளமை காண்க. ‘அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான்’ - இலங்கைவிட்டுப் பெருமாள் திருவடிகளில்
வர என்று ஓரடி இட்டபோதே, இராவண சம்பந்தத்தால் வந்த திருவின்மை நீங்கிச் சொரூபத்திற்குத்
தகுந்ததான ஸ்ரீ குடி புகுந்தது என்றபடி. ‘சதுநாகவரஸ் ஸ்ரீமான்’ - சர்வேசுவரன் அரைகுலையத் தலைகுலைய
வந்து விழ வேண்டும்படியான ஆர்த்திதன்னை ஒரு செல்வமாகச் சொல்லப்
_____________________________________________________
1. மடியேற்கை -
யாசித்தல்
2.
ஸ்ரீராமா. யுத். 16 :
17.
3.
விஷ்ணு தர்மம்.
68.
4.
ஸ்ரீராமா. யுத்த.
|