முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
246

1

1‘ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தங் கோவினை’ என்றும் சொல்லுகிறபடியே, தான் தூதனாயும் சாரதியாயும் இருந்து அடிமை செய்தன்றோ அடிமை கொண்டது? 2‘எதிர் சூழல் புக்கு ஒரு பிறவியிலே இவனை அடிமை கொள்ளுகைக்காகத் தான் பல பிறவிகளை எடுத்துத் திரிகின்றவன்’ என்றபடி. ஆழிப் பிரான் தன்னை - 3தான் தாழ நின்று ஆட்கொள்ளுமிடத்து, பகலை இரவாக்குகைக்கும், ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுக்கைக்கும் பெருநிலை நிற்கும் கருவியை உடையவனை. ‘நினைத்த மாத்திரத்தில் உடனே கண்ணபிரானுடைய திருக்கையில் உச்சியில் தானாகவே வந்து அடைந்தார்’ என்கிறபடியே, ஒரு கையிலே ஏறி விரோதிகளை அழியச் செய்பவன் அன்றோ? ‘நினைவு அறிந்து காரியம் செய்யுமவன்’ என்பதாம். கையும் திருவாழியுமான அழகினை அடியார்கட்கு ஆக்கி அதனைக்கொண்டு விரோதியைப் போக்குவார்க்கு விரோதியைப் போக்கி அதுதன்னைக் கையில் கண்டு அனுபவிப்பார்க்கு அனுபவிப்பிக்கும் உபகாரகன் ஆதலின், ‘ஆழிப்பிரான்’ என்கிறார்.

    தோளும் ஓர் நான்குடை - விரோதி போக்குகைக்கும் அழகுக்கும் வேறொன்று வேண்டாதே, தோள்கள்தாமே அமைந்திருக்கை. 4‘நீண்டனவாயும் அழகோடு திரண்டனவாயும் இரும்புத்தூண்களை ஒத்தனவாயும் எல்லா ஆபரணங்களாலும் (கண்ணெச்சில் வாராதபடி) அலங்கரிக்கப்படத் தக்கனவாயுமிருக்கிற திருத்தோள்கள் என்ன பிரயோஜனத்திற்காக அலங்கரிக்கப்படவில்லை?’

____________________________________________________ 

1. பெரியாழ்வார் திருமொழி, 1. 6 : 11.

2. மேற்கோட்பாசுரத்தில் ‘ஆட்கொள்ளத் தோன்றிய’ என்றதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘எதிர் சூழல் புக்கு’ என்று தொடங்கி.

3. ‘கண்ணன்’ என்றதனை இடமாக்கிக்கொண்டு, ‘ஆழிப்பிரான்’ என்றதற்குச்
  சங்கதி அருளிச்செய்கிறார், ‘தான் தாழ நின்று’ என்று தொடங்கி.
  பெருநிலை நிற்றல் - செய்தல்லது போகாமல் நிற்றல். பெருநிலை நிற்றலுக்கு
  மேற்கோள், ‘நினைத்த மாத்திரத்தில்’ என்று தொடங்குவது. இது, பாரதம்,
  வீடும பர்வம்.

     
‘பகலை இரவாக்குதலை’ வில்லி பாரதம், 14-ஆம் போர்ச்சருக்கம்,
  164 முதல் 170 முடியவுள்ள செய்யுள்களாலும், ‘ஆயுதம் எடுத்தலை’ 3ஆம்
  போர்ச்சருக்கம், 14 முதல் 20 முடியவுள்ள செய்யுள்களாலும் உணரலாகும்.

4. தோள்கள்தாமே அமைந்திருத்தலுக்கு மேற்கோள், ‘நீண்டனவாயும்’ என்று
  தொடங்குவது. இது, ஸ்ரீராமா. கிஷ். 3 : 14. ‘திருவடி’ என்றது, அனுமானை.
  இது, வைணவ மரபு. ‘கோலின காரியத்தளவல்ல