முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
248

New Page 1

போலே கொள்க. ‘நான்காகத் தோன்றுகைக்கு நாற்றோளனாய் அவதரித்தானோ?’ எனின், 1ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவிடத்து நாற்றோளனாய் அன்றோ வந்து அவதரித்தது? ‘மறைத்துக்கொள்க’ என்ன, மறைத்தான் மற்றைத் தோள்களை. நிலாத்துக்குறிப் பகவர், பட்டரை நோக்கி, ‘ஸ்ரீவைகுண்டத்தில் நாற்றோளனாய் இருக்கும் என்னுமிடத்துக்குப் பிரமாணம் உண்டோ?’ என்ன, 2‘பிரகிருதி மண்டலத்திற்கு மேலேயுள்ள ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர், சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்திருப்பவர், போஷகர்’ என்று உண்டாய் இருந்ததே?’ என்ன, வேறு பதில் சொல்ல முடியாமையாலே வேறுபட்டவராய் இருக்க, ‘பிரமாணப்போக்கு இதுவாயிருந்தது பொறுக்கலாகாதோ?’ என்று அருளிச்செய்தார்.

    தூ மணிவண்ணன் எம்மான்தன்னை - பழிப்பு அற்ற நீலமணி போலே இருக்கிற வடிவழகைக் காட்டி என்னைத் தனக்கே உரிமையாக்கினவனை. இதனால், சிலரை அகப்படுத்துகைக்குத் தோள்கள் தாமும் மிகையாம்படி இருக்கிற வடிவழகைத் தெரிவித்தபடி. ‘அடியார் பக்கல் அன்புடையராய்ச் செல்லும் இவர் இறைவனை ‘எம்மான்’ என்பான் என்?’ எனின், அடியார் பக்கலிலே சென்ற மனத்தையுடையராய்ப் போவாரை நடுவே வழி பறிக்கும் வடிவழகுடையவன் ஆதலின், 'எம்மான்’ என்கிறார். அன்றியே, ‘அடியாரை விரும்பும்படி செய்ததும் இவ்வடிவழகாலேயாதலின், ‘எம்மான்’ என்கிறார்’ என்னலுமாம். தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் - இவ்வழகை அனுபவித்துத் தொழ என்றால் தாளும் தோளும் பணைத்துக் கொடுக்குமவர்கள்; தாள் கூப்புகையாவது, 3அநந்யகதியாகை; கைகூப்புகையாவது, அகிஞ்சன் ஆகை.

_____________________________________________________ 

1. ‘ஆயின், நாற்றோளனாயே இராதொழிவான் என்?’ எனின், அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘ஆதியஞ்சோதியுருவை’ என்று தொடங்கி.
  ‘மறைத்துக்கொள்க’ என்றது, வசுதேவர் கூற்று. இது, பாகவதம், 5 : 3.

     
அங்கே மற்றுமோர் ஐதிஹ்யம் காட்டுகிறார், ‘நிலாத்துக்குறிப்பகவர்
  பட்டரை நோக்கி’ என்று தொடங்கி.

2. ஸ்ரீராமா. யுத். 114 : 15. இது மண்டோதரி கூற்று.

3. அநந்யகதித்துவமாவது, ‘களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண்
  மற்றிலேன்’ என்கிறபடியே, ‘சர்வேசுவரனை ஒழிய ரக்ஷகர் வேறு இலர்’
  என்றிருக்கை. ஆகிஞ்சந்யமாவது, கர்ம ஞான பத்திகளிலும், அவற்றுக்கு
  ஏதுவான ஆத்மகுணங்களிலும் அந்வயமின்றிக்கே, அவற்றுக்கு விபரீதங்க