முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
249

ஆக இரண

ஆக இரண்டாலும் ஒக்க ஏறின பிரயோஜனம், 1‘நிப்ருத: - ஒரு அவயவத்திலே எல்லா அவயவங்களும் ஒடுங்கும்படியாகை; பிரணத: - வேறே சிலர் எடுக்கவேண்டும்படி சிதிலனாய் விழுந்து கிடக்கை. பிரஹ்வ:- ‘இப்படிக் கிடந்தோம் என்னுமது நெஞ்சில் நடையாடாதிருக்கை’ என்கிறபடியே, நீங்கின அபிமானத்தை உடையன் ஆகை.

    நாளும் பிறப்பிடைதோறு - பிறவிகளில் இடங்கள்தோறும், அவைதம்மிலே நாள்தோறும். எம்மை ஆளுடை நாதரே - ‘வடிவழகாலேயாதல், குணங்களாலேயாதல், யாதேனும் ஒரு காரணத்தாலே அடிமை கொள்ள வேண்டுவது ஈசுவரனுக்காயிற்று, ஒரு காரணமும் இன்றியே அடிமை கொள்வார் இவர்கள்,’ என்பார், ‘எம்மை ஆளுடை நாதர்’ என்கிறார். ‘காரணம் இல்லை என்கிறது என்? பகவானுடைய அநுமதி முதலானவைகள் வேண்டாவோ?’ எனின், அவனதானால், இவர்களுக்கு அடிமையாமிடத்தில் ஈசுவரன் அநுமதியும் வேண்டா; இவன் நினைவும் வேண்டா; இவ்வளவும் வந்தே இருக்கும்; 2’எந்தம்மை விற்கவும் பெறுவார்களே’ என்றார் பட்டர் பிரானும்.

(2)

291

        நாதனை ஞாலமும் வானமும்
            ஏத்தும் நறுந்துழாய்ப்
        போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து
            எந்தை பிரான்தன்னைப்
        பாதம் பணியவல் லாரைப்
            பணியு மவர்கண்டீர்
        ஓதும் பிறப்பிடை தோறுஎம்மை
            ஆளுடை யார்களே.

   
பொ-ரை : ‘தலைவனும், பூமியும் தெய்வ உலகமும் ஏத்துகிற வாசனை பொருந்திய திருத்துழாய் மலரைத் தரித்தவனும், அழகிய நீண்ட சக்கரத்தையுடைய எந்தையும், எல்லார்க்கும் உபகாரகனு
_____________________________________________________

  ளானவற்றாலே தான் பரிபூர்ணனாயிருக்கிற இருப்பையும், தன்னுடைய
  சொரூபம் சர்வப் பிரகாரத்தாலும் ஈசுவரனுக்கு அத்தியந்த பரதந்திரமாய்
  இருக்கிற இருப்பையும் அநுசந்தித்து, ‘நம் காரியத்துக்கு நாம்
  கடவோமல்லோம்,’ என்றிருக்கை.

1. ‘நீங்கின அபிமானத்தையுடையனாகை’ என்றதற்குச் சம்வாதம், ‘நிப்ருத;’
  என்று தொடங்கும் சுலோகம். இது, ஸ்ரீராமா. யுத். 116 : 3.

2. பெரியாழ்வார் திருமொழி, 4. 4 : 10.