|
முற
முற்பட்டாயிற்று
இருப்பது; அவன் வேகமும் போராமல் அவனையும் இடுக்கிக்கொண்டு வந்து விழுந்தானாதலின், ‘புள் ஊர்ந்து
தோன்றினை’ என்கிறார். இடர்ப்பட்டார் தாமாகத் தமக்குத் தோன்றியது போன்றிருத்தலின்,
‘தோன்றினையே’ என்கிறார். மழுங்காத ஞானமே படையாகத் தோன்றினையே-இதனால், ‘திருவாழியைக்காட்டிலும்
மிக அண்மையிலிருக்கிற 1சங்கல்ப ரூப ஞானத்தையோ நினைத்தது,’ என்கிறார்.
மழுங்காத 2ஞானமே
படையாக - பலப்பல காரியங்களிலே ஏவாநின்றாலும் மழுங்குதல் இல்லாமல் புகர் பெற்று வருகின்ற
சங்கற்ப ரூப ஞானமே கருவியாக. மலர் உலகில் தொழும்பாயார்க்கு - திருநாபிக் கமலத்தை அடியாகவுடைத்தான
இவ்வுலகத்தில் அடியரானார்க்கு. அளித்தால் உன் சுடர் சோதி மறையாதே - இருந்தவிடத்தேயிருந்து
சங்கற்ப ரூப ஞானத்தாலே பாதுகாத்தாயாகில், ‘யானை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே அரைகுலையத்
தலைகுலைய உணர்த்தி அற்று வந்து விழுந்தான்,’ என்கிற நிரவதிக தேஜஸ்ஸானது இழந்ததேயன்றோ!
சிற்றாட்கொண்டான்
என்பார், ‘மறையாதே’ என்பதற்கு ‘மறையும் மறையும்’ என்று அருளிச்செய்வர்.
(9)
232
மறையாய நால்வேதத்
துள்நின்ற
மலர்ச்சுடரே!
முறையால்இவ் வுலகுஎல்லாம்
படைத்துஇடந்துஉண்டு
உமிழ்ந்தளந்தாய்;
பிறைஏறு சடையானும்
நான்முகனும்
இந்திரனும்
இறையாதல் அறிந்துஏத்த
வீற்றிருத்தல்
இதுவியப்பே!
________________________________________________
1. ‘சங்கல்ப ரூப ஞானத்தையோ
நினைத்தது?’ என்றது, சங்கற்ப ரூப
ஞானத்தைக்கொண்டு ரக்ஷிக்குமது தாழ்வு என்பதனைத் திருவுள்ளம்
பற்றி.
ஆக, சங்கற்ப ரூப ஞானத்தையும் நினைத்தானிலன் என்றபடி.
‘திருவாழியாழ்வான் கையிலே இருக்க, சற்கற்ப ரூப ஞானம் இருக்க,
சர்வாதிகனான நீதானே ஒரு விலங்கிற்காக
அரை குலையத் தலைகுலைய
வந்து விழுந்து ரக்ஷித்த இந்த நீர்மை ஒருவரால் பேசலாயிருந்ததோ!’
என்றபடி,
சங்கற்ப ரூப ஞானம் - நினைவின் வடிவமான ஞானம்.
2. ‘ஞானமே படையாக’
என்றதனை இடைநிலைத் தீவகமாகப் பொருள் கொள்க.
|