|
ம
மான எம்பெருமானுடைய பாதங்களை
வணங்குகின்ற அடியார்களை வணங்குகின்ற அடியார்கள்தாம் சொல்லப்படுகின்ற பிறப்புகளில் எல்லாம்
எம்மை அடிமை கொண்டவர்கள் ஆவார்கள்,’ என்கிறார்.
வி-கு :
ஞாலம், வானம் என்பன,
ஆகுபெயர்கள். துழாய்ப் போது - துழாய் மலர். எம் தந்தை - எந்தை.
ஈடு :
1‘தோளும்
தோள்மாலையுமான அழகிலே தோற்றிருக்குமவர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடியார்கள் எனக்கு
ஸ்வாமிகள்,’ என்கிறார்.
நாதனை - ஒரு காரணம்
பற்றாமலே தலைவனாய் உள்ளவனை. ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப் போதனை - தோளும் தோள்மாலையுமான
அழகைக் கண்டால் திருத்திரை நீக்கின பின்னர்போலே, நித்தியசூரிகளோடு நித்திய சமுசாரிகளோடு
வாசி அறப் புகழாநிற்பர்கள். திருமேனியின் பரிசத்தால் நறு நாற்றத்தை உடைத்தாய்ச் செவ்வி
பெற்றிருக்கின்ற திருத்துழாய்ப் பூவை உடையவன் ஆதலின்,
‘நறுந்துழாய்ப் போதன்’
என்கிறார்.
2’தத்தமது கற்பு அழியும் வார்த்தை சொன்னால் என்றிருக்கும் பெண்கள், முதலிலே
வார்த்தை சொல்ல அறியாத பாலகர்கள், வாய்விட்டு ஒன்றும் சொல்லாத யுவாக்கள், உறுப்புகளின்
சத்தி குறைந்த முதியோர்கள் இவர்கள் அனைவரும் வாய்விட்டு ஏத்தும்படி ஆயிற்றுப் பெருமாள் அழகு,’
என்றார் ஸ்ரீ
வால்மீகி பகவான்.
பொன் நெடுஞ்சக்கரத்து
எந்தை பிரான்தன்னை - பொன் போன்று அழகியதாய், அழகுக்கும் ஆபரணத்துக்கும் மிடுக்குக்கும்
தனக்கு அவ்வருகு இன்றியே இருப்பதாய், இனிமையாலே அளவு இறந்து இருப்பதான திருவாழியை உடையனாய்,
அவ்வழியாலே என்னை எழுதிக்கொண்ட உபகாரகனை. ‘ஆயின், பலகால் திருவாழியைச் சொல்லுவான் என்?’
எனின், இராஜகுமாரர்களுக்குப்
3பிடிதோறும் நெய் வேண்டுமாறு போன்று,
இவரும் ‘ஆழிப்பிரான்’
என்பது, ‘பொன் நெடுஞ்சக்கரத்து எந்தைபிரான்’ என்பதாய் அடிக்கடி கையும் திருவாழியுமான சேர்த்தியை
அனுபவிக்கிறார்.
____________________________________________________
1. ‘நறுந்துழாய்ப்
போதனை, பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர்,
எம்மையாளுடையார்கள்,’ என்பதனைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்
செய்கிறார்.
2.
ஸ்ரீராமா, யுத். 130 : 32.
3. பிடிதோறும் - உண்கின்ற
கவளந்தோறும்.
|