|
என
என்ன, ‘அவரைத் தண்டன்
இடவேண்டுமே?’ என்ன, ‘அது ஒன்று உண்டோ? வேண்டுமாகில் செய்கிறாய்,’ என்று என்னை அழைத்து,
‘இவனுக்குப் பாங்கானபடி ஓர் உரு திருவாய்மொழி சொல்லும்,’ என்ன, இவ்வளவும் வரக் கேட்டவாறே,
எனக்குத் தண்டன் இடப்புக, நான் ஒட்டாதொழிய, சீயர்பாடே சென்று ‘இவ்வர்த்தத்தினுடைய சீர்மை
அறியாமையாலே முன்பு அப்படிச் சொன்னேன்; இனி, நான் வணங்குவதற்கு இசையும்படி அருளிச் செய்ய வேண்டும்,’
என்று சீயரையிட்டு நிர்ப்பந்தித்து, அவன் வணக்கத்தை நான் ஏற்றுக்கொள்ளச் செய்தான்,’ என்று
1அருளிச்செய்வர்.
ஓதும் பிறப்பிடைதோறு
- ‘சாஸ்திரங்களிலே தாழ்வாகச் சொல்லப்படுகிற பிறவிகளில் அவகாசந்தோறும்’ என்னுதல்; அன்றியே,
2‘பிறந்தான், செத்தான்’ என்கிற சொல்லளவேயான பிறவிகளும் அமையும்; இது பெறில்
என்னுதல். எம்மை ஆள் உடையார்களே - 3‘அடியார்கள் குழாங்கள்’ என்றும், 4‘அந்தம்
இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை’ என்றும் ஒரு தேச விசேடத்திலே அடிமை செய்வது இவர்களுக்கே
அன்றோ? அதனை இங்கே கொள்ளக் கூடியவர்கள் இவர்கள். 5‘திருமகள் கேள்வன், தேவர்களுக்கும்
அசுரர்களுக்கும் பொதுவான தெய்வம்,’ என்கிறபடியே, பொதுவான தலைவனாந்தன்மையே அன்றோ இறைவனுக்கு
_____________________________________________________
1. ‘அருளிச்செய்வர்’
என்றதன் பின் ‘நம்பிள்ளை’ என்ற கருத்தாவைக்
கொணர்ந்து முடிக்க.
2. ‘பிறந்தான் செத்தான்
என்கிற சொல்லளவேயான’ என்றது, பிதற்தவன்
உடனே இறந்தான் என்கிற பேர் மாத்திரம் ஒழிய,
‘ஜீவித்தான்’ என்கைக்கு
அவகாசமில்லை என்றபடி.
‘இன்னினியே
நின்றான் இருந்தான்
கிடந்தான்தன் கேளலறச்
சென்றான் எனப்படுத
லால்.’
என்பது
நாலடியார்.
‘நெருநல் உளனொருவன்
இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ்
வுலகு.’
என்பது
திருக்குறள்.
3.
திருவாய். 2. 3 : 10.
4.
திருவாய். 10. 9 : 11.
5.
ஜிதந்தா. இவ்விடத்தில்,
‘ஆழி கடைந்தமுதம்
எங்களுக்கே ஈந்தாய்
அவுணர்கள்தாம் நின்னடிமை
அல்லாமை யுண்டோ?’
என்ற செய்யுள் ஒப்பு நோக்கலாகும்.
(கம்பரா. ஆரணி.)
|