|
உள
உள்ளது? மயர்வு அற மதிநலம்
அருளி விசேஷ கடாக்ஷம் பெற்ற எம்போல்வார்க்குத் தலைவர்கள் இவர்களே என்பார்,
‘எம்மை ஆளுடையார்கள்’
என்கிறார்.
‘ஆயின், பகவானுக்கு
அடிமைப்பட்டிருத்தல் மாத்திரம் போதியதாமோ? பிறவி முதலியன பார்க்கவேண்டாவோ?’ என்ன,
இங்குள்ளவை பார்க்க வேண்டாதபடி அன்றோ பகவானுடைய ஈடும் எடுப்பும் இல்லாத பெருமை இருப்பது?
மேலும், 1‘முற்காலத்தில் கெட்ட ஆசாரமுள்ளவனும், உண்ணத் தகாதனவற்றை உண்டவனும்,
செய்ந்நன்றி மறந்தவனும், வைதிக மரியாதையை இல்லை என்றவனும் ஆகிய இவர்கள், விசுவாசத்தோடு
ஆதிதேவனான ஸ்ரீமந் நாராயணனைச் சரணமாக அடைந்தார்களாகில், இவர்களைப் பரம புருஷனுடைய மஹிமையால்
தோஷம் அற்றவர்களாக அறிவாய்,’ என்கிறபடியே, யாதேனும் தண்மை உடையவனாயினும், அவனை அடைந்தானாகில்,
அவ்வாறு அடைந்தவனைக் குற்றம் அற்றவனாக நினைக்கவேண்டும் என்று அன்றோ
இதிகாசம்
கூறுகின்றது?
‘ஆயின், குற்றம் கிடக்கச் செய்தே குற்றம் அற்றவனாக நினைக்க வேண்டுகிறது என்?’ என்னில்,
‘பரமபுருஷனுடைய பிரபாவத்தாலே.’ ஆன பின்பு, இவனைக் குறைய நினைக்கையாவது, ‘இவனைச் சுத்தன் ஆக்குதற்குத்
தக்கதான சத்தி இறைவனுக்கு இல்லை,’ என்று பகவானுடைய பிரபாவத்தைக் குறைய நினைத்தலாம் அன்றோ?
2வீரப்பிள்ளையும்,
பாலிகை
வாளிப்பிள்ளையும்
என்ற இருவர்,
நஞ்சீயர்
ஸ்ரீபாதத்தில்
விருப்பம் உள்ளாராய், தங்களிலே செறிந்து போந்தார்களாய்த் தேசாந்தரம் போனவிடத்தே வெறுப்பு
உண்டாய்த் தங்களில் வார்த்தை சொல்லாதேயிருக்க, இவர்களைப் பார்த்துப் ‘பிள்ளைகாள்!
பொருள் இன்பங்கள் தியாச்சியம் அல்லாமையோ, பகவத் விஷயம் அராட்டுப் பிராட்டாயோ, ஒரு
ஸ்ரீவைஷ்ணவனும் ஸ்ரீவைஷ்ணவனும் தங்களிலே வார்த்தை சொல்லாதே வெறுத்து இருக்கிறது?’ என்ன, இருவரும்
எழுந்திருந்து தெண்டனிட்டுச் சேர்ந்தவர்களாய்ப்போனார்கள்.
(3)
____________________________________________________
1.
பாரதம்
2. ‘பாகவத சேஷத்துவம்
அருமையிலும் அருமை,’ என்பதற்கு மற்றும் ஓர்
ஐதிஹ்யம் காட்டுகிறார், ‘வீரப்பிள்ளையும்’ என்று
தொடங்கி. அராட்டுப்
பிராட்டு - போரும் போராதது.
|